Home செய்திகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ!..திருப்பூரில் பரபர சம்பவம்!

கொடூரமாகக் கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ!..திருப்பூரில் பரபர சம்பவம்!

திருப்பூரில் விசாரணை நடத்தச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

குடிமங்கலம் பகுதியில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம். குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து பகுதியில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்கள் தங்கி தோட்ட பராமரிப்பு வேலையில் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது அவர்களிடையே பிரச்சனை ஏற்படவே, இரண்டு மகன்களும் சேர்ந்து  தந்தையை தாக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஒரு காவலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தகராறில்  ஈடுபட்டவர்களை கண்டித்த சண்முகசுந்தரத்தின் மீது கோபம் அடைந்த மகன்கள் இருவரும் அவரை அங்கிருந்த அருவாளை எடுத்து சரமாறியாக வெட்டியுள்ளனர்.

 தாக்குதலின் போது படுகாயம் அடைந்த சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பிறகு மகன்கள் இருவர் மட்டுமில்லாமல் தந்தையும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஒடியுள்ளனர். சண்முகசுந்தரத்துடன் சென்ற காவலரின் தகவலின்படி போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.. காவல்துறை அதிகாரியே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட SSI சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
“சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. சண்முகவேல் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனவும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Exit mobile version