Thursday, February 5, 2026
HomeUncategorizedஎன்னப்பா சொல்றீங்க? முத்தம் கொடுப்பதில் இவ்ளோ விஷயம் இருக்கா?

என்னப்பா சொல்றீங்க? முத்தம் கொடுப்பதில் இவ்ளோ விஷயம் இருக்கா?

முத்தம் என்பது தம்பதிகள் தங்கள் அன்பு மற்றும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் ரொமான்டிக்கான செய்கையாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தங்களுடைய காதலை உயிருடன் வைத்துக்கொள்ள முத்தம் மிகவும் அவசியமானதாகும். முத்தமிடுவதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உண்டு. அதே சமயம் முத்தமிடுவதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உறவில் பல எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றனர். தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது உடலுறவு ரீதியான இடைவெளி அதிகரிக்கும் முத்தம் என்பது உடல் ரீதியான செயல்பாடு மட்டுமல்ல தங்களின் துணையின் மீதுள்ள அன்பு மற்றும் உணர்வு பூர்வமான தொடர்பும் ஆகும்.

 முத்தமிடுவதை குறைத்துக் கொண்டால் ஒருவருக்கொருவர் இடையே நெருக்கம் குறைய தொடங்கும். உடல் நெருக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும் முத்தத்தை நிறுத்திக் கொண்டால் உடலுறவு வைத்துக் கொள்வதில் பின்னடைவை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். முத்தம் இல்லை என்றால் அரவணைப்பு, கட்டிப்பிடித்தல், பாலியல் செயல்பாடு உள்ளிட்டவை குறைய தொடங்கும்.

 பாலியல் உறவுகள் இல்லை என்றால் உறவு முறைகளில் நெருக்கம் இருக்காது. முத்தத்தை குறைத்துக் கொள்ளும் பொழுது இருவருக்கு இடையே இருக்கும் கம்யூனிகேஷன் குறைய தொடங்கும். ஒருவரின் உணர்ச்சிகள் ஆசைகள் மற்றும் நோக்கங்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் பொழுது அவர்களின் இடையே பேச்சுவார்த்தை குறைய தொடங்கும். இதுவே ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வதில் கடினமான சூழல் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் முத்தமிடுவது குறைத்துக் கொண்டால் சுயமரியாதையும், தன்னம்பிக்கையையும் பாதிக்கும் என்றும் சொல்கின்றனர்.

 திருமணமான தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்திக் கொண்டால் தங்கள் துணை துரோகம் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். உடல் ரீதியான நெருக்கம் இல்லாத போது தங்கள் திருமண மகிழ்ச்சியானதாக இல்லை மற்றும் தங்கள் தோற்றுவிட்டது போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர். இனிமேல்  உங்கள் துணைக்கு அடிக்கடி  முத்தம் கொடுக்க மறக்காதீங்க!
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments