Tuesday, March 10, 2026
HomeUncategorizedநீதிஅரசர் டாக்டர் M.சொக்கலிங்கம் அவர்களுக்கு உயர்ந்த டத்தோஶ்ரீ விருது

நீதிஅரசர் டாக்டர் M.சொக்கலிங்கம் அவர்களுக்கு உயர்ந்த டத்தோஶ்ரீ விருது

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ” சுலு ” நாட்டின் மாட்சிமை மிகுந்த மன்னரின் பிறந்த தின விழா 8.8.2023 செவ்வாய்க்கிழமை மாலை மணிலா நகரில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் பெற்றது .

அரசு அழைப்பின் பேரில் நீதி அரசர் டாக்டர் M. சொக்கலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள் . அவ்விழாவில் மாண்புமிகு மன்னரும், அரசியாரும் , நீதிஅரசரின் நேர்மை, ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு உதவி, எல்லோரையும் ஒன்றாகப் பாவிக்கும் மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் மிகச்சிறந்த டத்தோஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்கள் .

விழாவிற்கு வந்திருந்த பல நாட்டு பிரமுகர்களும் நீதிஅரசருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நாட்டின் டத்தோஶ்ரீ விருதினைப் பெறும் முதலாவது இந்தியர் மாண்புமிகு நீதிஅரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதை நீதிஅரசர் பெற்றிருப்பது நீதிஅரசரின் குடும்பத்தாருக்கும், நமது நகரத்தார் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

நீதிஅரசர் அவர்களுக்கு நமது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீதிஅரசர் நீடுழி வாழ்க. அவர்தம் தர்மம் என்றும் தொடர்க .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments