Wednesday, February 4, 2026
HomeUncategorizedவந்தே பாரத்தில் புதிய மாற்றங்கள் அறிமுகம்.. தெற்கு ரயில்வே!

வந்தே பாரத்தில் புதிய மாற்றங்கள் அறிமுகம்.. தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : வந்தேபாரத் விரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் இருப்பது தெரிவிக்கப்படும். அதில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய நடப்பு முன்பதிவு வசதியானது குறிப்பிட்ட 8 வந்தே பாரத் விரைவு ரெயில்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மங்களூரு சென்டிரல்- திருவனந்தபுரம் சென்டிரல் (வண்டி எண். 20631), திருவனந்தபுரம் சென்டிரல்-மங்களூரு சென்டிரல் (20632), சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (20627), நாகர்கோவில்- சென்னை எழும்பூர் (206628) கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்டிரல்- மட்காவ் (20646), மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்டிரல்-விஜயவாடா (20677) ஆகிய 8 வந்தே பாரத் ரெயில்களிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments