Home வணிகம் ஏஐ கணினித் திறனால் ஸ்பேஸ்எக்ஸ் வருவாயில் அபார வளர்ச்சி!

ஏஐ கணினித் திறனால் ஸ்பேஸ்எக்ஸ் வருவாயில் அபார வளர்ச்சி!

பங்குச் சந்தையில் களமிறங்கிய பிறகு விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 92 சதவீதம் உயர்ந்து 7.8 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதில் கூகுள், அன்த்ரோபிக் போன்ற போட்டி நிறுவனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) கணினித் திறனை (compute) வாடகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 247 சதவீதம் அதிகரித்து 2.6 பில்லியன் டாலராகப் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே 14.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கைவசம் உள்ள சூழலில், ஏஐ கணினி உட்கட்டமைப்பிற்காக ஸ்பேஸ்எக்ஸ் செய்துள்ள மூலதனச் செலவு 15.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது; இது ஏஐ பிரிவின் வருவாயை விட சுமார் ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

துவக்கத்தில் இந்த அதிரடி வளர்ச்சியைக் கண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் 9.4 சதவீதம் வரை உயர்ந்தாலும், முதலீட்டாளர்கள் இந்த அதிகப்படியான செலவினங்களைக் கணக்கிட்டதும் பங்குகள் 6 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ஏஐ தயாரிப்புகளை உருவாக்குபவர்களை விட, அதற்குத் தேவையான கணினித் திறனை வழங்கும் நிறுவனங்களே உடனடி லாபத்தைப் பெறும் நிலையை இது உணர்த்தினாலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது செயற்கைக்கோள் சேவையின் மூலம் வரும் வருவாயைக் கொண்டு வருங்காலத் தேவையை எதிர்நோக்கி ஏஐ கணிப்பொறித் திறனில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருகிறது.

Exit mobile version