Home செய்திகள் சென்னை விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகள்.. யாருக்கெல்லாம்?

சென்னை விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகள்.. யாருக்கெல்லாம்?

சென்னை விமான நிலையத்திற்குள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை அழைத்து செல்ல அல்லது அவர்களை விமான நிலையத்தில் இறக்கி விட வரும் வாகனங்கள் அனைத்துக்கும்,15 நிமிடங்கள் இலவச நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்களுக்குள், வெளியில் சென்று விடும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை இன்று முதல் செயல்பாட்டிற்கு, சென்னை விமான நிலையத்தில் வந்துள்ளது. இது பயணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Exit mobile version