ஆன்மிகச் சிறப்புமிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நன்னாளில், கோயிலில் உள்ள மகா நந்திக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் முறைப்படி நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நந்தி பகவானுக்கு வண்ண மலர்களாலும், அருகம்புல் மாலைகளாலும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசிக்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரருக்கு நடந்த இந்தத் திருமுழுக்கு வழிபாட்டைக் கண்டு, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் மனமுருகி வழிபட்டனர்.
