மார்கழி மாண்பைச் சிதைக்கும் ‘மக்களிசை’ அரசியல்: ஆன்மீகப் புனிதத்தின் மீது பண்பாட்டுத் தாக்குதல்!
மார்கழி என்பது ஒரு வாழ்வியல் ஒழுக்கம்; தனுர் மாத அதிகாலைப் பொழுதுகள் இறைவனை நோக்கிய ஆன்மீகப் பயணம். ஆனால், ‘மக்களிசை’ என்ற பெயரில் பறை அடித்து இந்த அமைதியைத் துவம்சம் செய்வது, தமிழர்களின் தொன்மையான மரபின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுச் சிதைவு.
சினிமா சாதியினர் தங்களின் பிழைப்பிற்காக எதையும் செய்யலாம்; ஆனால், சென்னை சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம் கனிமொழி எம்.பி போன்றவர்கள் இந்த அத்துமீறலுக்குத் துணை போவது மிகத் தவறு.
பறை என்பது ஒரு சமூகத்தின் கருவி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், திருப்பாவை, திருவெம்பாவை ஒலிக்க வேண்டிய அதிகாலையில், பறை முழக்கத்தைத் திணிப்பது எவ்வகையில் நியாயம்?
அரிசி மாவு கோலங்களும், நாகஸ்வர இசையும், ஓதுவார்களின் குரலும் உருவாக்கும் அந்த ‘ஆன்மீகக் கதர்சிஸ்’ (Spiritual Catharsis) சூழலை, அரசியல் லாபங்களுக்காகவும் தலித் ஓட்டுக்களுக்காகவும் சிதைக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது.
பக்தி மார்க்கத்தின் அமைதியைச் சத்தங்களால் அழிக்கும் இந்தப்போக்கு, தமிழர்களின் பூர்வீகப் பண்பாட்டைப் பலிகடா ஆக்கும் செயலாகும்.
ஆன்மீகப் புனிதம் அரசியல் பிழைப்புக்கு இரையாகக் கூடாது!

