ஸ்டார்ட்.. ஆக் ஷன்..
அத்தியாயம். 11.
இயக்குனர். எம்.ஜி.ஆர்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப் படம்.. திரையிடப் படும்.. தருணம்..
படப் பெட்டிகளை அபகரித்து படச் சுருள்களை கொளுத்துவதற்கு திட்டம்.. தீட்டிய… கூட்டம்.. ஒரு புறம்..!
திரையரங்குகளின்.. திரைகளை கொளுத்துவோம்.. என மிரட்டல்கள்.. மறுபுறம்…!
மதுரையில் திரைப்படம் வெளியானால்.. மீசையை மழித்து.. சேலை கட்டிக் கொள்வதாக மேயரே சவால்.. விட்ட.. முத்தாய்ப்பு சூழல்..!
இவைகளுக்கெல்லாம்.. மேலாக..
பத்திரிக்கை விளம்பரங்களுக்கும்.. சுவர் போஸ்டர்களுக்கும் அதிக வரி விதித்து.. எங்குமே.. போஸ்டர் ஒட்ட முடியாத..
விளம்பரம் செய்ய முடியாத.. நிலையை ஆளுங் கட்சியே.. அரசு.. ரீதியாக.. செய்தது..!
போதிய விளம்பரம்.. இல்லாமல் …
போஸ்டர் ஒட்டாமல் படத்தை திரையிட வேண்டிய நிலைமை..
திரையரங்குக்கு கொண்டு வரப்படும்.. படப் பெட்டியை.. வழியிலேயே மடக்கி … தூக்கிச் சென்று.. அழிக்க அங்கங்கே.. ஆட்கள்.. காத்திருக்க…
அவர்கள்.. கண்களில் மண்ணைத் தூவி..
தியேட்டரில் படம்.. ரிலீசானது.!
தியேட்டருக்குள்ளிருக்கு.. கேட்ட.. விசில்களும்.. கைத்தட்டல் களும்.. வெற்றியை நாளை சரித்திரம்.. சொல்லும்.. என்ற பாடல்.. ஓசையும்..
வெளியில்.. காத்திருந்த ஆட்களை அதிர வைத்தது..
இது எப்படி நடந்தது. ?
தனித்தனி.. ரீலாக.. எடுத்து.. மடியில்.. கட்டி.. பையில்.. போட்டு.. சாக்கு மூட்டையில் சுற்றி.. சாதாரண மக்கள்.. போல… அரங்குக்கு போய்.. ஆபரேட்டர் அறையில் ஒப்படைத்து.. திரையிடப் பட்ட.. சாகசப் படம்.. உலகம் சுற்றும் வாலிபன்..
தலையில் வைத்த கூடையிலும்…. சைக்கிளிலும்.. ரிக்ஷாவிலும் … இரகசியமாக பட ரீல்ஸ்களை சுமந்து.. சென்று.. படம்.. ஓட்டப்பட்டது….!
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடி.. எம் ஜி ஆர். பிக்சர்ஸ்.. பேனரில்.. பட்டொளி வீசிப்.. பறந்தது..!
திரு.எம்.ஜி.ஆர்.. அவர்களின்.. திரை உலக முந்தைய.. வசூல்.. சாதனைகளை முறியடித்தது..‘உலகம் சுற்றும் வாலிபன்’
தமிழ்ப்பட வசூலிலும்.. அதுவரை இல்லாத வசூல் சாதனை!
பல காலம்.. இந்த வசூல் சாதனையை எந்தப் படமும்.. மிஞ்சவில்லை!
Mouth Talk என்பார்களே.. அது போல..வாய் மொழிகளே விளம்பரம் செய்து.. கூட்டங் கூட்டமாக மக்கள்.. திரையரங்களில் குவிந்தார்கள்…!
ஆளும் கட்சியின் தோல்விக்கு அச்சாரம் போட்ட படம் உலகம் சுற்றும்.. வாலிபன்!
குழந்தைகள்.. முதல்.. பெரியவர்கள் வரை.. உலகப் பயணம்.. போய் வந்தார்கள்…!
சண்டைக் காட்சியிலும்.. கூட ஆழமான தெய்வீக.. சிந்தனை கருத்துகள் சொல்லப்பட்ட படம்..!
அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு புத்த ஆலயத்திற்குள் வில்லன். M.N. நம்பியார் அவர்கள்.. திரு.எம்.ஜி.ஆர். அவர்களை தாக்குவார்… சரமாரியாக விழும்.. அடிகளை தடுக்காமல்..திருப்பித் தாக்காமல்…பொறுமை காத்து..
ஆலயத்துக்கு வெளியே வந்ததும்..
புனிதமான ஆலயத்துக்குள் வன்முறை கூடாது… என்று திருப்பித் தாக்கி.. வில்லனை வெல்வார்.. திரு.எம்.ஜி. ஆர்..அவர்கள்..!
அடிபட்டு.. கிடக்கும்.. வில்லனை ஆலயத்துக்குள் தூக்கிப் போய்.. புத்த பிட்சுவிடம்.. ஒப்படைப்பார்..!
வில்லனின் நிலை கண்டு… பதறும்.. புத்த பிட்சு.. பகைவனுக்கும் அருள வேண்டும் என போதிப்பார்..!
சித்தம் கலங்கிய விஞ்ஞானி எம்.ஜி.ஆர்.. பெரிய புத்தர்.. சிலையைப் பார்த்ததும்.. சித்தம்.. தெளிந்து.. ஞானம்.. பெறுவார் !
அந்தக் காட்சியின் இன்னொரு Irony..
நெஞ்சில்.. தீமைகளை சுமந்த வில்லனே.. புத்தர் மகானின்.. தெய்வீகப் பண்புகளை.. தன்.. வாயால் புகழ்ந்து.. பாராட்டும்படி காட்சி அமைந்திருக்கும்!..
இப்படி சில அழுத்தமான காட்சிகள்.. திரு. எம்.ஜி.ஆர். அவர்களுக்குள் இருந்த.. ஆன்மீக உணர்வையும்.. காட்டின!.
விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.. மனிதன்.. வாழத்தான் பயன்பட வேண்டும்.. அழிக்க அல்ல.. ! அணுகுண்டை உருவாக்கவோ …மூன்றாம் போரை நடத்தவோ.. பயன் படுத்தப் படக்கூடாது.. என்று ஆணித்தரமாக சொன்ன படம்.. உலகம் சுற்றும் வாலிபன்..
சண்டைக் காட்சிகளில் கூட புதுப் புது.. யுக்திகளை திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கையாண்டிருப்பார்!
கிளைமேக்ஸ் காட்சியில்.. காலில்.. ஸ்கேட்டிங் அணிந்து கொண்டு திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் … வில்லன்களோடு மோதும்.. சண்டைக் காட்சி.. இந்திய.. திரைக்கே.. புதிது..!
உலகம் சுற்றும்.. வாலிபனைத் தொடர்ந்து.. உரிமைக்குரல்.. இதயக்கனி.. என பெரும் வெற்றிப் படங்களைத் தந்த திரு.எம்..ஜி.ஆர்.. அவர்களை..
1977 ல் தங்கள் முதல்வராக்கி தமிழக
மக்கள் பெருமை பெற்றார்கள்!
அவர்.. கடைசியாக நடித்த படம்..
‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’!..
படத்தின்.. இலக்குனர்.. B.R.பந்தலு இறக்க நேர்ந்ததால்.. திரு.எம்.ஜி ஆர்.. அவர்களே..
படத்தை இயக்கினார்..!
பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதிய.. ‘கயல்விழி’ என்ற சரித்திர நாவலைத் தழுவி.. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம்.. உருவானது..
சோழ மன்னரின் சூழ்ச்சியால் பதவியை இழந்த சுந்தர பாண்டியன்.. பைந்தமிழ்க் குமரன் என்ற புலவராக.. உருமாறி..தன் பாடல்களால் புரட்சியை உருவாக்கி.. தன் ஆட்சியை மீட்கும் கதை களம்..! பிரமாண்டமான அரண்மனை காட்சிகள்!..பல்லாயிரம் படைவீரர்கள்.. பங்கு பெற்ற போர்க்கள காட்சிகள்!. நாட்டுப் பற்றையும்… விடுதலை வேட்கையையும் … தர்ம.. நீதியையும்.. வலியுறுத்தும் பாடல்கள்..என.. சரித்திரப் படங்கள்.. மூலமே.. தன்னை கதாநாயனாக கால் பதித்துக் கொண்ட திரு.எம் ஜி ஆர்.. அவர்களின் கடைசி… படமும் .. சரித்திரப் படமாகவே.. அமைந்தது. ஒரு வரலாற்று.. சிறப்பு தான்!
அவர்.. வள்ளல்.. தன்மைக்காகவும்.. ஏழை மக்களின் இடர் உணர்ந்து அன்னமிட்டு அவர் செய்த ஆட்சிக்காகவும்.. தமிழகம்.. அவரை என்றும்.. மறக்காது!..
அதே போல… திரு.எம்.ஜி.ஆர்.. அவர்கள் இயக்கிய.. நாடோடி மன்னன்.. உலகம்.. சுற்றும் வாலிபன்.. மற்றும்.. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்..படங்கள் … தமிழ்த் திரைப்பட பட்டியலில்.. என்றென்றும் இடம்.. பெற்றிருக்கும்.. சாதனைப்.. படைப்புகளாய் திகழும்.. என்பதில்.. ஐயமில்லை!..
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

