Wednesday, February 4, 2026
HomeUncategorizedஸ்டார்ட்.. ஆக்ஷன். அத்தியாயம். 17.. இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்! - சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன். அத்தியாயம். 17.. இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்! – சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக் ஷன்.

அத்தியாயம். 17.

இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்..

ஒரு திரைப் படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி 167 படங்கள்  தயாரித்த சாதனையை செய்தவர் யார்?.

அந்தக் காலகட்டத்தில் திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அவரவருடைய சொந்த குரல்களில் பேசியும்.. பாடியும்.. வந்த.. வேளையில்.. பின்னணி பாடகர்கள் பாடும் டெக்னிக்கை..தமிழில் முதலில் உருவாக்கியவர் யார்?

இந்தியாவில் முதல் முதலாக மொழி மாற்று படம் ..(டப்பிங் படம்) தயாரித்தவர் யார்? 

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தான் திரு.ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் !..

தமிழ் திரைப்பட உலகம் அபிரிமிதமான வளர்ச்சி பெற மூன்று கலை மேதைகள் காரணம் என்பார்கள்!..

அந்த மூன்று கலை வித்தகர்கள்…

திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் …

திரு எல்.வி.பிரசாத் அவர்கள் மற்றும் திரு ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்…!

திரு.ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் காரைக்குடியில் 1907 …ஆம் ஆண்டு பிறந்தவர்!..

அப்பா..ஆவிச்சி செட்டியார் …அம்மா. லக்ஷ்மி ஆச்சி…!

அப்பா.. ஆவிச்சி.. காரைக்குடியில் …

‘A .v and sons’ என்ற பெயரில்.. மளிகை கடை.. ஒன்றை நடத்தி வந்தார்..! Hmv ..columbia .. இவைகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களின் கிராம். போன் இசைத் தட்டுகளை விற்று வந்தார்!.

இளைஞன்.. ஏ.வி.மெய்யப்பன் அப்பாவிற்கு துணையாக கிராம ஃபோன் இசைத் தட்டுகளை விற்று வந்தார்!

செழிப்பான செட்டியார் சமூகம்.. வாணிகத்திலும்.. வட்டிக்கு கடன் தரும்.. தொழிலும்.. சிறந்து.. விளங்கிய நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்!

நல்ல மதி நுட்பமும் தொழில் நுட்பமும் ஒரு சேர வளர்ந்த  அவர் மனதில் ஒரு புதிய எண்ணம் பிறந்தது!

தகப்பன் எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்பது மரபு!.. அதற்கேற்ப கிராம ஃபோன் இசைத் தட்டுகளை விற்பதை விட  இசைத் தட்டுகளை நாம் தயாரித்தால் என்ன என்று ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்!

அதன் விளைவாக அப்பாவின் ஆசியோடு மெட்ராசுக்கு வந்தார்! முதலீடு அதிகம்.. தேவைப் பட்டதால்.. நாராயண ஐயங்கார்.. மற்றும் சுப்பையா செட்டியார் இவர்களோடு இணைந்து கிராமஃபோன் இசைத் தட்டுகளை தயாரிக்கும்.. நிறுவனத்தை ஆரம்பித்தார்.

1932 இல் Saraswathi Stores.. உதயமானது!

வெளி நாட்டாரோடு ஒப்பந்தம் போட்டு..

கிராமஃபோன்  இசைத் தட்டுகளை ஒலிப்பதிவு செய்து..தயாரித்து விற்பனை செய்தார்!..மற்கத்திய இசையோடு… கர்நாடக சங்கீத இசைத் தட்டுகளையும்.. தயாரித்தார்!.. மேடை நாடகங்களை … செட் ஆக.. தயாரித்து விற்பனை செய்தார்!

இசைத் தட்டுகளின் விற்பனை அமோகமாக நடந்தது!.

அதுவரை வெளி வந்த மவுன படங்கள் பேச தொடங்கிய கால கட்டம்.!

‘Talkies Era..’ என்று பேசும் படங்களின் பொற்காலம் துவங்கியிருந்தது!

கிராமஃபோன் சப்தங்களில் ஊறியவர் அல்லவா!

ஒலிகளின் பலம்.. அவருக்குத் தெரியுமே!

ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் மனதில் புதிய.. சிந்தனை.. சப்தமிட்டது!..

திரைப் படங்களைத் தயாரிக்க முடிவு செய்தார்!

அதன் .. விளைவு…1934 இல்

Saraswathi Sound Productions..ஐ நிறுவினார்.!

‘அல்லி அர்ஜுனா’ என்ற முதல் படத்தை துவக்கினார்!..மதராசில் படப் பிடிப்பு நடத்த வசதி இல்லாததால் கல்கத்தாவில் சென்று படப்பிடிப்பை நடத்தினார்!..

ஒரு மாத காலம் படப்பிடிப்பு அந்த காலத்தில் 80 ஆயிரம் ரூபாய் செலவானது படத்தை எடுத்து முடித்து போட்டுப் பார்த்த ஏ.வி.மெய்யப்பன் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது! அந்த கால படங்கள் எல்லாம் சூரிய வெளிச்சத்தில்  தான் எடுக்கப்படும்!..படத்தில் நடித்த நடிகர்.. நடிகை..அத்தனை பேரும் சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண்களை சுருக்கிக் கொண்டும் … மூடிக் கொண்டும் படம் முழுக்க நடித்திருப்பது தெரிய வந்தது!.. இந்த குளறுபடிகளோடு படம் வெளியானது!

பெருத்த தோல்வியை சந்தித்தது! பெரும் பண நஷ்டம்!. பங்குதாரர்கள் விலகினார்கள்! போராட்டம்

ஆனாலும்.. முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்  ஓயவில்லை!.

அடுத்த படம் எடுத்தார்!

‘ரத்னவள்ளி’!..

இந்தப் படத்திலும்.. பேரதிர்ச்சி காத்திருந்தது!

நடித்தவர்கள்.. பேசிய.. வசனங்கள்… உதட்டசை வோடு.. பொருந்தவில்லை!.

Non sync ஆனது!.

இந்த கோளாறை சரி செய்ய முடியவில்லை!.

அந்தப் படமும்.. வெளியாகி  தோல்வியை தொடர் கதை ஆக்கியது!. 

ஆனாலும் ஏ. வி. மெய்யப்பன் அவர்கள்

சளைக்கவில்லை! 

திரைப் படங்கள் தயாரிக்கும் உறுதியைக் கை விடவில்லை !..

 A.K.கிருஷ்ணசாமி என்கின்ற ஒரு பட்டதாரி… ஏவி.மெய்யப்பன் அவர்களோடு இணைந்தார்.. அவர்.. நடிகர்.. எழுத்தாளர்… இயக்குனரும் கூட..!

பத்து வருடங்களுக்கும் மேலாக.. ஏ.வி.மெய்யப்பன் அவர்களோடு பயணித்தார்!

பெங்களூரில் வசித்த தயாரிப்பாளர் ஜெயந்திலால் … ஏவி.மெய்யப்பன் அவர்களோடு.. கை.. கோர்த்தார்! 

Pragathi Picture Limited  உருவானது!.. ‘நந்தகுமார்’ என்ற படத்தை ஏ.வி.மெய்யப்பன். அவர்கள்..தயாரித்தார்.!

டி ஆர் மகாலிங்கம் என்கின்ற 14 வயது இளைஞனை அறிமுகம் செய்தார் …

இந்தப் படத் தயாரிப்பில்

 ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் பல புதுமைகளைச் செய்தார்..!

எந்த ஸ்டூடியோவிற்குள்ளும் படம் பிடிக்காமல்.. எந்த அரங்கங்களும் போடாமல்.. மவுண்ட் ரோட்டிலிருந்த Club house இல்.. படமாக்கினார் … அடையாறில் இருந்த Admirality house லும் படமெடுத்தார்!

ஸ்டூடியோவிற்குள் படப் பிடிப்பு.. நடத்தப் படாத முதல்.. படம் என்ற பெருமையை ‘நந்தகுமார்’படம் பெற்றது!..

இந்தப் படத்தில் ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இன் னொரு வரலாற்றையும்

படைத்தார்!

படத்தில்..பாடிய நடிகையின் குரல் வளம்.. சரியில்லை என்று.. பம்பாயிலிருந்த பாடகி லலிதா வெங்கட் ராமன் அவர்களைப் பாட வைத்து.. 

தமிழ்த் திரைப் பட உலகில் முதன் முதலாக.. Play back technique …ஐ பயன் படுத்தினார் !..

படம்.. தோல்வி அடையவில்லை.. ஆறுதல் வெற்றி கிடைத்தது!

‘பூகைலாஷ் ‘ படத்தை தயாரித்தார்!

பிரமாண்ட வெற்றி கிடைத்தது!

தொடர்ந்து

‘வாயாடி’… ‘புலி பாஞ்சாலி’ .. ‘சபாபதி’.. என வரிசையாக  படங்களை தயாரித்தார்!

1940 இல் வெளி வந்த ‘சபாபதி’.. திரைப்படம்…A.K. கிருஷ்ணசாமி இயக்கத்தில் பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவை படமாக அமைந்தது..

டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும் காளி.என். ரத்தினம் அவர்களும்… சாரங்கபாணி அவர்களும் நடித்து நகைச்சுவை படங்களின் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது.!

1943 இல்  ‘ஹரிச்சந்திரா’ என்ற படத்தை கன்னடத்தில் தயாரித்து … அந்தப் படத்தை … அதே பெயரில்

1944 ல்.. தமிழில்.. டப்பிங்.. செய்து.. வெளியிட்டார்!

இந்திய திரைப் பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு டப்பிங் செய்யும்.. டெக்னிக்.. ஏ.வி.மெய்யப்பன் அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது..!

1945 ம் வருடம்.. தமிழ்த் திரைப் பட உலகில்..ஏ.வி.மெய்யப்பன் அவர்களால் இன்னொரு புரட்சி நிகழ்ந்தது..!

அது என்ன?

(தொடரும்.)

 இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments