Sunday, March 22, 2026
HomeUncategorizedஸ்டார்ட்..ஆக்ஷன் அத்தியாயம் 19. இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்!

ஸ்டார்ட்..ஆக்ஷன் அத்தியாயம் 19. இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்!

ஸ்டார்ட்..ஆக்ஷன்

அத்தியாயம் 19.

இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்.

மெட்ராஸில் …திரைப்படம் எடுக்க முடியாத சூழ்நிலையில்….

ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் தன்னுடைய திரைப்படத் தயாரிப்பை காரைக்குடிக்கு மாற்றினார்!

காரைகுடி..தேவகோட்டையில்..ஊருக்கு வெளியே … பெரிய காலி மைதானத்தில் இருந்த ஒரு நாடக அரங்கத்தை நீண்ட கால ஒத்திக்கு..வாங்கி.. அங்கே படப்பிடிப்பு தளத்தை நிறுவினார்…

ஏ.வி.எம் ப்ரொடக்சன் நிறுவனம் உருவானது!

ஏவிஎம் ஸ்டுடியோஸ் பிறந்தது!..

A.V.M.Prodution ஐ உருவாக்கினார்!.

காரைக் குடியிலேயே படப்பிடிப்பு தளங்களை அமைத்து… படங்களை உருவாக்கினார்..!

ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆரம்பிக்கப் பட்ட படம்..

‘வேதாள உலகம்’…!

படத்தையும் அவரே இயக்கினார்.!

பரந்த மைதானத்தில் கொட்டைகள் போடப்பட்டு தீத்துக்கோட்டையில் படப்பிடிப்புத் தலங்கள் உருவாக்கப்பட்டு அவுட்டோரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மழைக்காலங்களில் சுற்றி இருக்கும் தண்ணீரில் தவளைகள் இருந்து கொண்டு அவை எழுப்பும் சப்தங்கள் படப்பிடிப்பின் ஒலிப்பதிவிற்கு இடைஞ்சலாக இருக்கும் சூழ்நிலையில் தொழிலாளர்கள் அம்புகளை எய்து தவளைகளின் ஓசைகளை அடக்குவார்கள்! பின்னர் படப்பிடிப்பு தொடரும் !.. இப்படியெல்லாம் பல இயற்கையான இடையூறுகளை தாண்டி படமெடுக்கும் சூழல் தேவகோட்டை ஏ.வி.எம் ஸ்டுடியோவில்!..

வேதாள உலகம் வேகமாக வளர்ந்து வந்த நேரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது!

இந்திய நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் தீவிரமாகி நாட்டுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்கின்ற ஒரு சூழல் உருவாகி இருந்த காலகட்டம் அது!

அப்போது மதராசில் ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் ‘ தியாக உள்ளம்’ என்கின்ற நாடகத்தை பார்க்க நேர்ந்தது!

1936-இல் வெளி வந்த இரு சகோதரர்கள் கதையின் மூலத்தை எடுத்து ப.நீலகண்டன் அவர்கள் எழுதிய நாடகம் அது! எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்கள் நடித்த அந்த நாடகத்தை ஏ. வி. மெய்யப்பன் அவர்கள்  பார்த்தார்!.. பிரமிப்பானார்!

அந்த நாடகத்தை ‘நாம் இருவர்’ என்ற பெயரில் திரைப் படமாக எடுக்க முடிவு செய்தார்! அந்த நாடகத்துக்கு முதுகெலும்பாக இருந்தது சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பாடல்கள்!.. அந்தப் பாடல்களை அப்படியே தான் எடுக்கப் போகும் படத்திற்கு பயன்படுத்த ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் விரும்பினார்! அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் உரிமை யாரிடம் இருந்ததோ  அவர்களை அணுகி அறுநூறு ரூபாய்க்குள் பாடல்களின் உரிமைகளை வாங்கி விட முடியும் என்று ஏ.வி. மெய்யப்பன் அவர்கள்.. எண்ணினார்! பாடல்களின் உரிமையாளர்களோ… ரூபாய் 10,000 கொடுத்தால் தான்  உரிமைகளை தருவோம் என்று சொல்லி விட கஷ்டப்பட்டு பணத்தை புரட்டி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களின்   உரிமைகளைப் பெற்றார்.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்! 

பிற் காலத்தில் தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களை நாட்டுடைய ஆக்க வேண்டும் என்று முயன்றபோது.. ஏ. வி.மெய்யப்பன் அவர்கள் தன்னிடம் இருந்த உரிமையை இலவசமாகவே விட்டுக் கொடுத்து ஒரு பைசா கூட வாங்காத.. வள்ளலாக  உருவான வரலாறும் நிகழ்ந்தது! 

பாடல்களின் உரிமையை வாங்கியதும்.. ‘நாம்  இருவர்’.. திரைப் படத்தை தயாரித்து.. இயக்கும்.. பணியில் தீவிரமானார் !

எஸ்.வி. சகஸ்ர நாமம்.. அவர்களுக்கு ஹீரோவாக.. நடிக்க.. ஆசை.. ! ஆனால்.. வியாபாரத்திற்காக டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் நடிக்கும்படி ஆனது..! 

வி.கே .ராமசாமி அவர்கள் தன் 21 வது வயதில் வயோதிகன் வேடத்தில் அறிமுகமாகி 40 வருடங்களுக்கும் மேலாக சிறந்த நடிகராக வலம் வந்தார்! திரு. பி.ஆர். பந்துலு அவர்கள் நடித்தார்!

படம் கருப்பு வெள்ளைப் படமாக ஆரம்பிக்கப் பட்டு பிறகு சில பகுதிகள் கலரிலும் எடுக்கப்பட்டது !

படத்தின்.. பிலிம்.. சுருள்கள்.. கார்களிலும் ரயில்களிலும் மெட்ராசுக்கும் காரைக்குடிக்கும் மாறி மாறி பயணப்பட்டுக் கொண்டிருந்தன! தரமான படம் உருவாக வேண்டும் என்று போராடி படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருந்தார் ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்..அவர் உழைப்பு வீண் போகவில்லை படம் நல்லபடியாக அமைந்தது!

‘நாம் இருவர்’ … படத்தில் வரும் முதல் காட்சி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளில் துவங்கி.. கடைசி காட்சி காந்தியடிகளின்  77 வது பிறந்த நாள் அன்று   நிறைவு பெறும்!

படம் முழுக்க சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் முழங்கும்!

டி.கே.பட்டம்மாள் அவர்களின் வெண்கலக் குரலில்.. ஒலிக்கும்!.

இந்தியாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய எழுச்சி வரிகள் தமிழகமெங்கும் ஒலிக்கும் வண்ணம் படம் உருவானது !.

‘ஆடுவோமே … பள்ளு … பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’.. ‘மகான் காந்தி மகான்’.. ‘கருணாமூர்த்தி காந்தி மகான்’.. ‘வாழிய செந்தமிழர்..வாழிய நற்றமிழர்’ போன்ற தேசப் பற்று கொண்ட பாரதியின் பாடல்கள் ஏராளமாக படத்தில் இடம் பெற்றன! குமாரி கமலா அறிமுகமாகி .. ஆடிய நடனம் மக்களின் பாராட்டுகளை அள்ளின!

இமாலய வெற்றி பெற்றது நாம் இருவர்.. திரைப் படம்!

வேதான உலகம்.. படப்பிடிப்பு.. நடந்து வந்த.. நேரம்!..

அப்போது.. ஒரு பேரிடி..!

 என்ன நடந்தது?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments