ஸ்டார்ட் … ஆக்ஷன்
அத்தியாயம். 20.
இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்.
காரைக்குடி..தேவகோட்டை.. ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் …!
1948 ஆம் ஆண்டு!..மார்ச்! 23ஆம் தேதி! சனிக்கிழமை!.. நள்ளிரவு!.
திடீரென..ஸ்டுடியோவில் தீப் பிடித்தது!.. அப்போது படத் தொகுப்பு அறையில்.. கே.சங்கர் அவர்கள் ஓகே.. செய்யப்பட்ட ஷாட்டுகளையும்.. காட்சிகளையும்.. பிரித்து வைத்து விட்டு.. மேலும் எடிட் செய்ய படத்தின் தலைமை எடிட்டர் எம்.இராமனின் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் தீ விபத்து.. நேர்ந்தது.!..
அப்போது.. அங்கிருந்த ஏ.வி.எம்.மின் ஜெனரல் மேனேஜர் ஜி.ஆர். அவர்கள் தன்னிடமிருந்த கட்டிங் பிளேயரால் ஒயர்களை துண்டித்து மின் சப்ளையை நிறுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தார்! கே.சங்கர் அவர்கள் ஜன்னலை உடைத்து படச் சுருள்களை வெளியே வீசி.. அவரும் வெளியே.. குதித்து.. படச் சுருள்களை தீயிடமிருந்து காப்பாற்றினார்..
இந்த K. சங்கர்தான் பின்னாளில் வெள்ளி விழா படங்களைத் தந்த இயக்குனர். கே.சங்கர் அவர்கள்..!
ஜி.ஆர் அவர்கள் ஏ. வி.மெய்யப்பன் அவர்களிடம் ஸ்டெனோவாக சேர்ந்து.. படிப்படியாக மேனேஜராக உயர்ந்தவர்! அவர் எப்போதும் தன் சட்டை பையில் பேனாவோடு.. ஸ்க்ரூ டிரைவர் … சிறிய டார்ச் லைட்… டெஸ்டர் … போன்ற உபகரணங்களை வைத்திருப்பார்… கைப் பையில் கட்டிங் பிளேயர் … ஸ்பேனர் போன்ற ஆயுதங்களும் இருக்கும்..! இதை மற்றவர்கள் கேலி செய்வதுண்டு!.. இருந்தாலும் அவருடைய அந்த குணாதிசயம் தான் அன்றைக்கு வேதாள உலகம் திரைப் படத்தை காப்பாற்றியது …! கருவிகளை காப்பாற்றியது..! ஸ்டூடியோவிற்கு நேர இருந்த பெரிய அழிவை தடுத்தது.. எனலாம்!.
ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் தன்னுடைய தொழிலாளர்களை தன் குடும்ப உறுப்பினர்களாக நடத்தும் வழக்கம் உள்ளவர்!.. அவர்களுக்கு வீடு கட்ட நிலம்!.. வீடு கட்டிக் கொள்ள கடன் ஏற்பாடு! இன்சூரன்ஸ்!.. இவையெல்லாம் செய்து தந்தவர்!. பிள்ளைகள் படிக்க உதவி … மருத்துவமனை செலவுகள் …. என்றெல்லாம் செய்து வந்தவர்!..அந்த தர்மம் அவர் நிறுவனத்தைக் காத்தது என்று சொல்லலாம்!
இந்த நிகழ்வுக்குப் பிறகு.. காரைக்குடியில் இருந்த கருவிகளோடு ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் மெட்ராஸுக்கு மாறியது!
சுதந்திர.. இந்தியாவில்… நிலைமைகள் … ஒழுங்கு பட ஆரம்பித்திருந்தது!
கோடம்பாக்கத்தில் மின் இணைப்பும் சீராகி இருந்தது!
1948!..ஏ.வி.எம் ப்ரொடக்ஷன்ஸ்..ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் … வடபழனி.. கோடம்பாக்கம்.. ஆற்காடு சாலையில்.. நிலை கொண்டது … உலக உருண்டை போல ஏ.வி.எம் என்ற உருண்டை முகப்பு வாசலில் கம்பீரமாக சுற்ற.. AVM என்ற விருட்ஷம்.. ஐந்து தலை முறைகளையும் தாண்டி உலகம் முழுவதும்.. வெற்றி வலம் வந்தது!..
வேதாள உலகம்.. திரைப்படம்.. வெளியானது.. அதற்குப் பிறகு.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்.. இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத காவியம்
வைஜெயந்தி மாலா அவர்கள்.. கதாநாயகியாக அறிமுகமான ‘வாழ்க்கை’!
இளைஞர்கள் கொண்டாடும் ஹீரோயினாக வைஜெயந்தி மாலா.. அவர்கள்.. பெயர் பெற்றார்…!
படம் பெரிய வெற்றி பெற்றது!…
‘வாழ்க்கை’ திரைப் படத்தில்.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் ஒரு புதுமையைச் செய்தார்!
சில பாடல் காட்சிகளை தேர்ந்தெடுத்து .. கையால் வரையப் பட்ட வண்ணங்களை இணைத்து … புதிய பிரதி.. எடுத்து.. மீண்டும் படத்தை வெளியிட்டார்.!
ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் அதற்குப் பிறகு தயாரிப்பில் மட்டும்.. மும்முரமானார்!
அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தில் உருவான ‘ஓர் இரவு’… மக்கள் திலகத்தின் ‘அன்பே வா’. நடிகர் திலகத்தின் ‘பராசக்தி’…’அந்த நாள்..’ ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’.. ‘பச்சை விளக்கு..’ .. ‘உயர்ந்த மனிதன் ‘…
பானுமதி அவர்களின்.. ‘அன்னை’.. காலத்துக்கும் வாழும் இது போன்ற காவியங்கள் ஏ.வி.மெய்யப்பன் அவர்களால் தயாரிக்கப் பட்டது!..
‘குழந்தையும் தெய்வமும்..’
‘அதே கண்கள்’.. ‘மேஜர்.. சந்திரகாந்த்.’ ‘சர்வர் சுந்தரம்’ என ஏ.வி.எம்மின் வெற்றிப் படைப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்!
1955 இல்.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் ‘Hum Panchi Ek Dal Ke’ தயாரித்த இந்தி படம்.. இந்திய ஜனாதிபதி அவர்களின். தங்க மெடலைப் பெற்றது!..
வட இந்தியாவில்..AVM லோகோவும்…. இசையும்.. திரையில் காட்டப் பட்டதும்.. கரகோஷம் அரங்கை அதிர வைக்கும்.!
அந்த அளவிற்கு இந்தியா முழுக்க..
ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் வெற்றிகண்டார்!
‘முயற்சி திருவினை யாக்கும்’.. என்ற ஏ.வி. எம். நிறுவனத்தின் தாரக மந்திரத்தை வாழ்ந்து காட்டியவர்!..
எல்லோரின் கருத்துக்களையும்.. மதித்து.. நேரத்தை மதித்து.. பணத்தை மதித்து.. வீண்.. செலவுகள்.. ஆடம்பரங்களை தவிர்த்து.. தேவைக்கு செலவு செய்து வாழ்ந்தவர்..!
திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல்.. இயக்குனராக மட்டுமல்லாமல் தன்னை ஒரு சிறந்த தேசிய வாதியாக.. நாட்டுப்பற்று உள்ளவராக உருவாக்கிக் கொண்டவர்!. எந்த கட்சியையும் சாராதவர்! அனைத்து கட்சிக்கும் வேண்டியவர்!
கொடையாளி ! சமூக சேவகர்!..AVM அறக்கட்டளையை நிறுவி அவர் செய்த தான.. தர்மங்கள் ஏராளம்!.. படிப்பு என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு அத்தியாவசியம் என்பதை உணர்ந்து பல இடங்களில் பள்ளிகளை நிறுவியவர்!
பாமர மக்களோடு…திரைப் படத்துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு படிக்க உதவியவர்!..
1956 இல் தன் 49 வது வயதிலேயே உயில் எழுதி தன் சொத்துக்களை.. பிறருக்கு தந்து விட்டு தனக்கென.. எந்த சொத்தும்.. இல்லாமல்.. வாழ்ந்தவர்!..
1979 இல் அவர் மறைய நேர்ந்தது!. ஆனால் அவருக்குப் பிறகு அவருடைய சந்ததியினர் AVM என்ற நிறுவனத்தை கட்டி காத்து மேலும் சிறப்பாக வாழ வைத்தார்கள்!.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. உலக நாயகன் கமலஹாசன்.. கேப்டன் விஜயகாந்த்… மற்றும் முன்னணியில் இருந்த அத்தனை நடிகர்கள் … நடிகைகளை வைத்து … இயக்குனர்களை வைத்து பல வெள்ளி விழா படங்களை தந்தார்கள்! 2006 ஜூலை முப்பதாம் தேதி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் திரு உருவ சிலையை சவுத் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் திறந்து வைத்தார்!
ஏ. வி. மெய்யப்பன் அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அவருக்கு ஒரு நினைவஞ்சலையும் வெளியிட்டு கௌரவப் படுத்தியது!
தமிழ் திரை உலகத்துக்கு மகத்தான சாதனை செய்து … பல கலைஞர்களையும் … நடிகர்களையும் உருவாக்கி உதாரண புருஷராக விளங்கிய திரு ஏ வி.மெய்யப்பன் அவர்கள் நினைவுகள் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டே இருக்கும்!..
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

