Thursday, February 5, 2026
HomeUncategorizedஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 24. இயக்குனர். பி. ஆர். பந்துலு..-சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 24. இயக்குனர். பி. ஆர். பந்துலு..-சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்

அத்தியாயம். 24.

இயக்குனர். பி. ஆர். பந்துலு..

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டு.. தமிழரின்.. பெருமை சொல்லும்.. தமிழ்த் திரைக் காவியங்களை தயாரித்து இயக்கியவர்! மொழிகளை தாண்டி திரைப்பட கலையை வாழ வைத்தவர்! பிரம்மாண்டங்களை திரையில் காட்டி காலா காலத்துக்கும் வாழும் தெய்வீக திரைப் படங்களை தந்தவர்!

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் பி.ஆர்.பந்துலு அவர்கள்!.

வட ஆற்காடு சித்தூர் மாவட்டத்தில் 

1910 இல் பிறந்தார்! நல்ல படிப்பாளி!

ஆசிரியராகப் பணி புரிந்தார்!…நடிப்பின் மீது ஏற்பட்ட தாகத்தில்  சந்திரகலா நாடக மண்டலில் இணைந்தார்! நடிப்பு பயிற்சி பெற்றார்!  பிரபலமான நாடக நடிகராக உருவானார்! பிறகு ‘ப்ரொபஷனல் தியேட்டர்’ என்ற பெயரில் அவருக்கென்றே ஒரு நாடக குழுவை உருவாக்கி பல கன்னட நாடகங்களை நடத்தி வந்தார்!

1936 இல் கன்னடப் படமொன்றில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்!

பிறகு 1950 இல் ‘மச்சரேகை’ என்ற படத்தை தயாரிப்பாளர் பி. புல்லைய்யா அவர்களோடு இணைந்து தயாரித்தார்!

பிறகு இயக்குனர் ப.நீலகண்டன் அவர்களுடன் இணைந்து ‘பத்மினி பிக்சர்ஸ்’ நிறுவனத்தை உருவாக்கி ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’… ‘முதல் தேதி’ ஆகிய  வெற்றிப் படங்களை தயாரித்தார்..!

நடிகராக … தயாரிப்பாளராக வலம் வந்த அவர் 1957 இல்  ‘தங்கமலை ரகசியம்’ திரைப் படத்தை முதன் முதலாக இயக்கினார்!.

சிவாஜி கணேசன் அவர்களும்… ஜமுனா அவர்களும். நடித்தார்கள்!

தாதா மிராஸி அவர்கள் திரைக்கதை வசனம்.. எழுதினார்!

 கன்னடத்திலும் ‘ரத்தினகிரி ரகஸியம்’

என்ற பெயரில் தயாராகி ஒரே நேரத்தில்.. இரு மொழிகளிலும்.. வெளியாகின!

படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது!

பி.ஆர்.பந்துலு ஒரு சிறந்த இயக்குனராக உருவானார்!

1958 இல் ‘சபாஷ் மீனா’  திரைப் படத்தை இயக்கினார்..!

சந்திரபாபு.. அவர்கள்.. சிவாஜி கணேசன் அவர்களை விட.. ஒரு ரூபாய் அதிகம்.. சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தார்!

சிவாஜி கணேசன் அவர்களும்.. ஈகோ.. பார்க்காமல்… சந்திரபாபு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.. நடித்தார்!

நகைச்சுவைப் படங்களில் இலக்கணம் படைத்த படங்களில் ஒன்றாக ‘சபாஷ் மீனா’ அமைந்தது! பெரும் வெற்றி பெற்றது!

1959 இல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை பி.ஆர். பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கினார்! பல சரித்திர சாதனைகளை இந்த படம் செய்தது …!

சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிறு வயதிலேயே கட்டபொம்மன் வேடத்தில்.. நடிக்க வேண்டும்.. என்ற ஆவல்.. இருந்தது..!

கட்டபொம்மனை மையப்படுத்தி தெருக் கூத்தாக நடத்தப்பட்ட ‘கம்பளத்தார்’ கூத்தை பார்த்த நாளிலிருந்து சிறு வயது கணேசன் அவர்களுக்கு கட்டபொம்மனாக நடிக்கும் ஆர்வம் வந்தது! பிரபல நடிகராக வளர்ந்த பிறகு அவரும் எழுத்தாளர் சக்தி.டி.கே கிருஷ்ணசாமி அவர்களும் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட கயத்தாறு வழியே காரில் பயணம் செய்தபோது சிவாஜி கணேசன் அவர்கள் கிருஷ்ணசாமி அவர்களிடம் கட்டபொம்மனை மையப்படுத்தி ஒரு நாடகத்தை எழுதச் சொன்னார்!

அவரும் ஆர்வத்தோடு ஒரே மாதத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்!

அந்த நாடகத்தை 1957 இல் சேலத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் அரங்கேற்றம் செய்தார்!

மேடை அலங்காரம்…உடைகள்.. ஆபரணங்களுக்கே ரூபாய் 50,000 வரை முதலீடு செய்து பிரம்மாண்டமாக நாடகத்தை நடத்தினார்!

நாடகத்தைப் பார்த்த பி.ஆர்.பந்துலு அவர்கள் அதை திரைப்படமாக்க முடிவு செய்தார்! 

ஏற்கனவே தமிழ் திரையுலகில் கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை வைத்து படமெடுக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன! பிரபல நடிகர் 

பி.யு சின்னப்பா அவர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சி இடையில் கை விடப்பட்டது! அதே போலவே எஸ்.எஸ்.வாசன் அவர்கள்

தன் கதை இலாகாவை வைத்து கட்டபொம்மன் வரலாற்றின் அடிப்படையில் ‘கட்டபொம்மன்’ என்ற திரைப் படத்துக்கான விளம்பரத்தை வெளியிட்டார்!..படம் எடுக்கும் முயற்சியிலும் இறங்கினார்!

சிவாஜி கணேசன் அவர்கள் நடித்தால் தான் படம் சிறப்பாக இருக்கும்  என்று நினைத்தார்!.

ஆனால் சிவாஜி கணேசன் அவர்கள் அதற்கு உடன்படவில்லை…

ஏன்?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments