Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்..ஆக்ஷன் அத்தியாயம். 28. இயக்குனர் பி.ஆர். பந்துலு- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன் அத்தியாயம். 28. இயக்குனர் பி.ஆர். பந்துலு- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன்

அத்தியாயம். 28.

இயக்குனர் பி.ஆர். பந்துலு .

தன் பொருளாதார சிக்கல்களிலிருந்து மீள

பி.ஆர். பந்துலு.. அவர்கள்.. நாடியது …

மக்கள். திலகம்  எம்.ஜி.ஆர். அவர்களை!

அவரும்.. படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்!

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் உருவானது!..

அந்த காலத்தில் வெற்றி பெற்ற பிரபல ஆங்கில படங்களான ‘Captain Blood’ ..

‘The crimpson pirates’…  ‘The Black pirates ’… போன்ற படங்களை தழுவி ….அதே பாணியில் கடல்…கப்பல் கொள்ளையர்கள் ..சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் நாயகன்! என்ற கதைக் களத்தை  ஜெகதீசன் அவர்கள் உருவாக்கினார்!.. ஆர்.கே. சண்முகம் அவர்கள் வசனம் எழுதியிருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்களோடு முதல் முறையாக செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜோடியாக நடித்தார்..!

அந்தப் படத்தில் உருவான அவர்களுடைய நட்பு வளர்ந்து … 17 படங்களில் இருவரும் இணைந்து நடிக்கும் அளவுக்கு வெற்றிகரமான ஜோடியாக அமைந்தது!

அது மட்டுமல்ல…செல்வி.ஜெயலலிதா .. அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசியல் வாரிசாக வளர்ந்து.. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின் செல்வி ஜெயலலிதாவே தமிழக முதல்வராக மூன்று முறை ஆட்சி செய்யும் சரித்திரமும் நிகழ்ந்தது! இவை அனைத்திற்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அடித்தளம் போட்டது! அற்புதமான பாடல் வரிகள்!

அந்தப் பாடல்களில் ஒலித்த  சுதந்திர தாகங்கள் … அரசியல் கருத்துகள்.. மக்களை கொள்ளை கொண்டன! சுதந்திரத்துக்காகப் போராடும் நாயகன்

பாடவேண்டிய முக்கியமான பாடலுக்கு பல பாடலாசிரியர்கள் எழுதியும் திருப்தி வராமல் தனக்கு எதிரியாக இருந்த கண்ணதாசன் அவர்களேயே வர வழைத்து அந்தப் பாடலை எழுத வைத்தவர் எம்ஜிஆர் அவர்கள்! 

அந்தப் பாடல் தான் …

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!. காற்று நம்மை அடிமை என்று சுடுவதில்லையே..! கோடி மக்கள்.. சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை..!’ என்ற பாடல்!..

இன்றும் பல நாடுகளில்.. சுதந்திரம் பெற  தவிக்கும் மக்களின் குரலாக அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!

வசனங்களும் பெரும்.. வரவேற்பு பெற்றன!

அற்புதமான வாள்ச் சண்டைக் காட்சிகள்! படத்தின் பெரும் பகுதி கார்வாரில் படமாக்கப்பட்டது!

இந்தப் படப்பிடிப்பு நடக்கும் கால கட்டத்தில் தமிழகம் எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது!

எம்.ஜி.ஆர் அவர்களால் அந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை! 

அவர் கார்வார்  சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய சூழல்!

இது அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டது! எம்.ஜி.ஆர் அவர்கள் கடும் கண்டனத்தை சந்திக்க நேர்ந்தது! ஆனாலும் அண்ணா அவர்கள் அவருடைய தொழிலுக்கும் படப் பிடிப்புக்கும் முக்கியத்துவம் தந்து எம்.ஜி.ஆர். அவர்களை கார்வாரில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்தார்!

தமிழக மக்களின் வேதனைக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் தன்னுடைய தொழிலுக்கு மரியாதை தந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் அவர்கள் வேதனை யோடு நடிக்க வேண்டிய சூழ்நிலை!

 

‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 1965 ஆம் வருடம் வெளியானது! மகத்தான வெற்றி பெற்றது! எம்ஜிஆர் அவர்களின் வாழ்வில் ஆயிரத்தில் ஒருவன் மறக்க முடியாத ஒரு படம்!

அதற்குப் பிறகு எம்ஜிஆர் அவர்கள் செல்வி ஜெயலலிதா ஜோடி இணைந்து நடித்த ‘ரகசிய போலீஸ் 115’..

‘தேடிவந்த மாப்பிள்ளை’… போன்ற படங்களையும் உருவாக்கினார்!

| 974 !…கடைசியாக ‘கடவுள் மாமா’ என்ற படத்தை இயக்கினார்! அந்த வருடமே இந்த உலகத்தை விட்டு மறைந்தார்!

பி.ஆர்.பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கிய படங்களில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படமும் ‘கப்பலோட்டிய தமிழன்’ படமும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் அவரை சிறந்த திரைப்படக் கர்த்தாவாக … Film maker ஆக .. நம் தமிழ் திரைப் பட உலகத்தில் என்றென்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கும்!..

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments