Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் ஆக்ஷன்.. அத்தியாயம்.29. இயக்குனர். ஏ.சி.திருலோகச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக்ஷன்.. அத்தியாயம்.29. இயக்குனர். ஏ.சி.திருலோகச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக்ஷன்

அத்தியாயம்.29.

இயக்குனர். ஏ.சி.திருலோகச்சந்தர்.

உயர்ந்த இயக்குனர் என்ற வார்த்தைக்கு ஏற்றபடி ஆறடி மூன்று அங்குல உயரம்.. ஆஜான பாகுவான தோற்றம்..

பட்டதாரி! ஆங்கில இலக்கியங்களில் தேர்ச்சி! 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களோடு பல வெற்றிப் படங்கள்!..

ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர்!

இத்தனை பட்டயங்களுக்கும் சொந்தக்காரர் …

ஆற்காடு செங்கல்வராய முதலியார் என்ற ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள்!

1930 இல்.. வேலூரில் பிறந்தவர்!

அவர்  முதலில் பணி புரிந்தது ‘குமாரி’ என்ற திரைப்படத்தில்!

வருடம் …1952 ..! படத்தில் நடித்தவர்.. எம்.ஜி.ஆர்.அவர்கள்..!

 பட்டதாரியான ஏ.சி. திருலோகச் சந்தரிடம் அன்றே.. ‘அரசியலில்.. தான்.. ஈடுபட்டு.. நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும்..’ என்பதை சொல்லி.. விவாதித்திருக்கிறார் … எம்.ஜி.ஆர்.. அவர்கள்..!

ஒரு பிரதான கட்சியில் சேர்ந்து.. கட்சியோடு …வளர்ந்து..பின்னர் தனிக் கட்சித் துவக்கி.. நாட்டை ஆளலாம்.. என்ற யோசனையை அன்றே சொன்னவர் அரசியல் பட்டதாரியான ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்கள்..!

எம்.ஜி.ஆர். அவர்கள்.. வாழ்வில்.. அத்தனையும்.. நடந்தேறியது!

அன்று உருவாகிய அந்த ஆழமான நட்பை.. என்றும்.. பயன்படுத்தாமல்.. எம்.ஜி.ஆர். அவர்களை விட்டு.. தூரத்தில்.. நின்றே.. வளர்ந்தவர்.. ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்கள்!

பல படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றிய ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள்…1960 இல் ‘விஜயபுரி வீரன்’

படத்திற்கு திரைக்கதை  எழுதினார்! திரையுலகில் கதாசிரியராக அறிமுகம் கிடைத்தது.!

‘Three Musketeers’ என்கின்ற ஆங்கில படத்தின் அழகிய தமிழாக்கமாக ‘விஜயபுரி வீரன்’ அமைந்தது!

பெரிய வெற்றியை பெற்றது!

ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்களுக்கு சடையப்ப வள்ளல் போல் துணை இருந்தவர் ஏவி சரவணன் அவர்கள்!. அவரது தந்தையார் ஏ.வி.மெய்யப்பன் அவர்களிடம் சரியான வகையில்.. சரியான தருணத்தில் … ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்து ஏ.வி.எம் நிறுவனத்தில் பணி புரிய பிள்ளையார் சுழி போட்டவர்!

ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் முயற்சியின் விளைவாக ….

1962  இல் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்துக்கு ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்கள்  கதை  எழுதினார்!

படம் வெற்றி பெற்றது..!

அந்தப் படத்துக்குப் பின்…

ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களை கதாசிரியர் என்ற நிலையில் இருந்து இயக்குனர் என்ற நிலைக்கு  ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் உயர்த்தினார்..!

அதே 1962 இல் ‘வீரத் திருமகன்’ என்ற படத்தை இயக்கும் நல்ல சந்தர்ப்பத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களுக்கு அளித்தார்!

‘வீரத் திருமகன்’ திரைப் படம் முழுக்க சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்!..

ஏ.வி.எம் நிறுவனமோ குடும்ப உறவுகளை … மென்மையான உணர்வுகளோடு படங்களாக தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் … 

‘வீரத் திருமகன்’  வேறொரு வகையான படமாக அமைந்தது !

படப்பிடிப்பில் முதல் முறையாக கேமராவில் zoom lens.. பயன் படுத்தப் பட்டது!..

‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது ! அதனால் அந்த  வார்த்தைகளையே பெரிதாக போட்டு படத்தின் விளம்பரங்கள் உருவாக்கப்பட்டது!

படத்தின் விளம்பரங்கள் வித்தியாசமாக வெளி வந்தன! அரைப் பக்க விளம்பரங்கள் நான்கு  முழு பக்கத்தையும் நிரப்பும் வண்ணம் பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தது!

நியான் விளக்கு எழுத்துக்கள் மூலம் விஜயபுரி வீரன் விளம்பரப் படுத்தப்பட்டது 

படம் வெற்றி பெற்றது!

ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களுக்கு இயக்குனர் என்ற அங்கீகாரம் கிடைத்தது!

அதைத் தொடர்ந்து 1963 ல் ‘நானும் ஒரு பெண்’ என்ற படத்தை ஏ.சி. திருலோகச் சந்தர் அவர்கள் இயக்கினார்! 

கருப்பு நிறமான ஒரு கதாநாயகியின் வாழ்க்கை போராட்டம் படத்தின் மையக் கருவாக இருந்தது !

அதிகம் பிரபலமாகாத விஜயகுமாரி அவர்களை கதாநாயகியாக  நடிக்க வைத்து … மாமனாராக  எஸ்.வி.ரங்காராவ் அவர்களை நடிக்க வைத்து எடுக்கப்பட்ட குடும்பச் சித்திரம்..

‘நானும் ஒரு பெண்’!..

நகைச் சுவை நடிப்பில்.. கொடி கட்டிப் பறந்த நாகேஷ் அவர்களை.. சோகக் காட்சியில் நடிக்க வைத்து.. படத்தின் நீளம் கருதி அந்தக் காட்சி.. எடிட்டிங்கில்.. நீக்கப் படும்.. நேரம்.. போராடி.. அந்தக் காட்சியை தக்க வைத்து.. வேறு.. காட்சிகளின் நீளத்தைக் குறைத்து.. படத்தை வெளியிட்டு மிகப் பெரிய பாராட்டுகளை நாகேஷ் அவர்களுக்கு  வாங்கித் தந்தார் … ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள்!

நாகேஷ் அவர்கள் பிற்காலத்தில் சர்வர் சுந்தரம் முதல் பல படங்களில் குணச் சித்திர வேடம் ஏற்று கதாநாயகனாக நடிக்கும் சூழ்நிலைக்கு நானும் ஒரு  பெண்ணில் அவர் நடித்த சோக மயமான நடிப்பு விதை போட்டது!

‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ என்ற பாடல் கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது!

கரிய நிறம் கொண்ட கிருஷ்ண பரமாத்மாவின் நிறத்தைப் பிரதிபலித்த நாயகி.. கண்ணனிடமே தன் வேதனைகளை  முறையிடும் அந்த பாடல் படத்தின் கருவை ஆழமாக பிரதிபலித்தது !

படம் பெரிய வெற்றி  பெற்றது!

1963  ம் ஆண்டுக்கான … சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது ‘நானும் ஒரு பெண்’ படத்துக்கு கிடைத்தது!

ஏ.வி.எம். நிறுவனத்தின் பிரதான இயக்குனராக ஏ.சி.திருலோச்சந்தர் அவர்கள் உயர்ந்தார்!

ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களை தன்னுடைய ஐந்தாவது மகன் போலவே நடத்தினார்!

ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் சிறந்த தோழனாக ஏ.சி.திருலோகச்  சந்தர் அவர்கள் விளங்கினார்!

‘நானும் ஒரு பெண்’ திரைப்படம் தெலுங்கிலும் இந்தியிலும் ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் எடுக்கப்பட்டன!

ஏ.வி.எம் இன் ஐம்பதாவது  திரைப் படத்தை இயக்கும் பொறுப்பு ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களுக்கு கிடைத்தது!

அந்த நேரத்தில் அவர் ஒரு பரிசோதனை செய்தார் !

இதுவரை ஏ.வி.எம் நிறுவனத்தில் நடிக்காத ஒரு பிரபல நடிகரை கதாநாயகனாக நடிக்க வைத்து … அந்த பிரபல நடிகரையும் இதுவரையில் நடிக்காத  முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில்   நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கினார்!.. 

அந்தப் படம்?

(தொடரும்)

 –இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments