Sunday, March 22, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்..ஆக்ஷன் அத்தியாயம். 30.. இயக்குனர். ஏ.சி.திருலோகச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன் அத்தியாயம். 30.. இயக்குனர். ஏ.சி.திருலோகச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்

அத்தியாயம். 30

இயக்குனர். ஏ.சி.திருலோகச்சந்தர்.

ஏ.வி.எம் நிறுவனம் 1965 வரை 

எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து எந்த படமும் தயாரித்தது இல்லை!

ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களை சண்டைக் காட்சிகளுக்காக ரசித்துப் பார்த்தவர்!.

ஏ.வி.மெய்யப்பன் அவர்களும் தன் மகன்களை ஆங்கில படங்களோ.. அல்லது எம்ஜிஆர் படங்களோ மட்டுமே பார்க்க  அனுமதித்திருக்கிறார் !

ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் தங்கள் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை ஹீரோவாக வைத்து திரைப்படம் தயாரிக்க ரொம்ப நாளாக ஆசைப்பட்டார்!

ஏ.வி.எம். சரவணன் அவர்களின்.. நெருங்கிய நண்பர்.. நடிகர்.. எஸ்.ஏ. அசோகன் அவர்களும்.. அந்த திட்டத்தை செயல்படுத்த துணை நின்றார்!

எம்.ஜி.ஆர் அவர்களின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றிருந்த நேரம்!.. ஏ.வி.எம்.சரவணன் அவர்கள்  ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களிடம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக ஒரு கதையை உருவாக்க சொன்னார்!

ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களும் அந்தக் கால கட்டத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கிலப் படத்தை தழுவி ‘அன்பே வா’ என்ற பெயரில் ஒரு கதையை  உருவாக்கினார்!

அந்தக் கதையைக் கேட்ட ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து படமெடுக்க சம்மதித்தார்!

ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்களும் … எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து ‘அன்பே வா’ கதையைச் சொன்னார்!

பொதுவாக எம்ஜிஆர் அவர்களின் படங்களில் தாய் பாசமோ … தங்கை பாசமோ … பிரதானமாக இருக்கும்! சமுதாயத்தில்.. நீதி.. தர்மத்திற்காக ஹீரோ போராடும்.. காட்சிகள் இருக்கும்…  நான்கு … ஐந்து சண்டை காட்சிகள் இடம் பெறும்! .. அதிலும் கிளைமாக்ஸில் வில்லன்களோடு எம்.ஜி.ஆர் அவர்கள்  ஆக்ரோஷமாக சண்டையிடும் நீளமான சண்டைக் காட்சியும் இருக்கும்! ஆனால் இந்த பார்முலாக்கள் எதுவுமே இல்லாத கதையாக ‘அன்பே வா’ படக் கதை இருந்தது! 

இருந்தாலும் ஏ.சி.திருலோகச் சந்தர்  மீது நம்பிக்கை வைத்து எம்.ஜி.ஆர் அவர்கள் ‘அன்பே வா’ படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்!

ஆனால் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை நினைத்துக் குழம்பி படப்பிடிப்பின் போது சில ஆலோசனைகளை சொல்வார்!

ஆனால் முடிவில் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்  அவர்கள் என்ன விரும்புகிறாரோ.. அதை அப்படியே நடித்துக் கொடுப்பார்!

படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டூடியோவில்..பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கங்களிலும்.. ஊட்டி.. சிம்லா என்ற மலை வாசஸ்தலங்களிலும் நடை பெற்றது!..

1966 ம் ஆண்டு வெளியானது!…

‘அன்பே வா’  மகத்தான பொழுது போக்கு சித்திரமாக …பெரும் வெற்றியை பெற்றது!

படத்தின் கடைசி நிமிடங்களில் ஒரு நீண்ட பாடல் காட்சி இடம் பெற்றது !

தியேட்டரில் ஆடியன்ஸ் தங்கள் இருக்கைகளை விட்டு எழாமல் அந்தப் பாடலை முழுமையாக கேட்டு விட்டு அதற்குப் பிறகுதான் வெளியே போனார்கள்! அந்த அளவுக்கு சிறந்த பாடல்களுக்காகவே ஓடிய படம் ‘அன்பே வா’!

எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்பட சரித்திரத்திலேயே முற்றும் முழுக்க வித்தியாசமான திரைப்படமாக ‘அன்பே வா’ இன்றும் விளங்கி வருகிறது!

எம்.ஜி.ஆர். அவர்கள்..‘தன் வாழ்வில் தான் மிகவும் விரும்பிய படம் ‘அன்பே வா’! அது ஒரு இயக்குனரின் படம்’என்று ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்களைப் பற்றி பெருமையாக சொல்வார்!

‘அன்பே வா’ வெற்றிக்குப் பிறகு ‘ராமு’ என்று வெற்றி படத்தை ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கினார்!

வரிசையாக சில படங்கள் தோல்வி கண்டு.. தொழிலில்.. தேக்கத்திலிருந்த ஜெமினி கணேசன் அவர்களுக்கு மறு வாழ்வு… தந்த படமாக.. ‘ராமு’.. அமைந்தது!

ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்கள்.. இயக்கிய ‘அதே கண்கள்’ .. முதல்.. Bi-Lingual படமாக வரலாறு படைத்தது!

தமிழ், தெலுங்கு இரண்டிலும்.. வெளியாகி .. திகில் படங்களின் Bench Mark ஆனது!..

அதற்குப் பிறகு ஏ.சி.திருலோகச் சந்தர் அவர்கள்… சிவாஜி கணேசன் அவர்களை வைத்து  ‘தங்கை’… ‘என் தம்பி’… ‘திருடன்’.. என வரிசையாக படங்களை இயக்கினார்!

அத்தனையும் வெற்றிப் படங்கள்!

அவைகளை தொடர்ந்து …

சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்த ‘தெய்வமகன்’ படத்தை இயக்கினார்!

1969 இல் வெளி வந்த ‘தெய்வமகன்’ திரைப் படம் சிவாஜி கணேசன் அவர்களின் மூன்று வித்தியாசமான வேடத்திற்காக பெரிதும் பாராட்டப் பட்டது!.. நடை.. உடை.. பாவனை.. குரல் அனைத்திலும் மாறுபட்டு.. நடித்து.. நடிப்பிற்கு இலக்கணம் படைத்தார்.. சிவாஜி கணேசன் அவர்கள்!

அந்தப் படத்தில் எடுக்கப்பட்ட Mask Shots கள் பிரமிப்பூட்டின! 

முதல்  முறையாக ஒரு தமிழ் திரைப் படம் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட.. தேர்வு செய்யப்பட்ட சரித்திரம்.. ‘தெய்வமகன்’ படத்தால் நடந்தது!

சிவாஜி கணேசன் அவர்களும் தன்  இயக்குனர்கள் வரிசையில் ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களை பிரதான ஸ்தானத்தில் வைத்து மரியாதை தந்திருக்கிறார்! அது நெடுங் காலம்.. நீடித்து 1987 இல் ‘அன்புள்ள அப்பா’ திரைப் படம் வரை தொடர்ந்திருக்கிறது!..

ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள் 19888 ல் ‘சுக்கிரியா’என்ற இந்தி படத்தை இயக்கினார்!..

அதுவே அவருக்கு கடைசி படம்!

2016 இல் தன் 86வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்!

ஆனால் அவர் படைப்புகள்… என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டே இருக்கும்!..

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments