Home கிளாசிக் ஸ்டார்ட் ஆக்ஷன். அத்தியாயம் 35 இயக்குனர். ஏ.பி. நாகராஜன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக்ஷன். அத்தியாயம் 35 இயக்குனர். ஏ.பி. நாகராஜன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக்ஷன்.

அத்தியாயம் 35

இயக்குனர். ஏ.பி. நாகராஜன்.

தெய்வீக இயக்குனர்.. அருட்செல்வர்.. என்று புகழாரம்.. பெற்றவர்..

புராணக் கதைகளை பட்டி தொட்டியெங்கும்.. கொண்டு சென்றவர்.

ஒரே லொகேஷனில் முழு படம்.. ஓடும்.. பஸ்ஸிலும்.. டூர்.. நடக்கும் ஸ்தலங்களிலும் நடக்கும்.. கதை..

மாமல்லபுர மகிமை.. சொன்ன புலமை

என.. பல சாதனைகளைச் செய்தவர் …

இயக்குனர் . ஏ. பி. நாகராஜன் அவர்கள்.

பிறந்தது.. 1928 இல் சங்ககிரி.. அக்கம்மா பேட்டையில்…

கம்பீரமான குரலும்.. உருவமும்.. தெளிந்த தமிழும்.. அவரை.. நடிகராக வளர்த்தது.

‘பழனி கதிரவன் நாடக சபா’வை நிறுவி.. நாடகங்கள் எழுதி.. நடித்துப் பெயர்.. பெற்றார்!.. அவரது.. நால்வர் என்ற.. நாடகம்.. திரைப்படமாக.. உருவானது..

அதன்  கதை, திரைக்கதை வசனத்தை எழுதி.. ஹீரோவாகவும்.. நடித்தார்.!

தொடர்ந்து.. நடிகராகப் பல படங்கள்!

 திரைக் கதாசிரியராக.. ‘டவுன் பஸ்’…

‘நான் பெற்ற செல்வம்’… ‘மக்களைப் பெற்ற மகராசி’ என முத்திரைப் படங்கள்!..

மக்களைப் பெற்ற மகராசியில்.. கொங்கு தமிழைப் பயன்படுத்தி.. பாராட்டுதல்களை அள்ளினார்!

நடிகர்.. V.K.ராமசாமி அவர்களோடு இணைந்து ..’ ஶ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ்’ என்ற

தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி..

 ‘நல்ல இடத்து சம்பந்தம்’(1958),.. ‘தாயைப் போலப் பிள்ளை.. நூலைப் போல சேலை’(1959)

போன்ற படங்களைத் தயாரித்தார்!

1958 இல்.. ஏ. பி. நாகராஜன் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய ‘சம்பூர்ண ராமாயணம்’.. வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்..!

என்.டி. ராமாராவ் அவர்கள்.. ராமராக நடித்த இந்தப்.. படத்தில்.. பரதனாக சிவாஜி கணேசன்.. அவர்கள்.. நடித்து.. பெரும்.. பாராட்டைப் பெற்றார்!

இந்தத் திரைப் படம் ஏ.பி.நாகராஜன் அவர்களின் புராணப் பட தாகத்துக்கு வித்திட்டது!

பிற் காலத்தில் புராணப் படங்களின் பிதாமகன் என.. ஏ.பி. நாகராஜன் அவர்கள் பிரபலம் பெற இந்த படம் அடித்தளம்.. போட்டது!

1962 இல்.. முதல்.. முறையாக ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்தை இயக்கினார்..

சிவாஜி கணேசன் அவர்களும் திருமதி சாவித்திரி அவர்களும் நடிக்க உருவான இந்த படம் திருமதி சாவித்திரி அவர்கள் கர்ப்பமானதால் இடையில் தடைப் பட்டது! அவருக்கு பதில் திருமதி சரோஜாதேவி அவர்களை வைத்து படத்தை தொடரலாம் என்று தயாரிப்பாளர் 

வி.கே.ராமசாமிஅவர்கள் வற்புறுத்திய போது அதை ஒரு இயக்குனராக ஏ.பி. நாகராஜன் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்!

திருமதி.. சாவித்திரி அவர்கள்.. குழந்த பெற்று.. போதிய ஓய்வெடுத்த வரும் வரை.. காத்திருந்து.. பல மாதங்கள் கழித்து சாவித்திரி அவர்களை வைத்தே தொடர்ந்து படத்தை இயக்கி வெளியிட்டார்!..

படம்..வெற்றி பெறவில்லை..!

ஏ.பி.நாகராஜன் அவர்கள்.. மனம்.. தளரவில்லை.

‘ஶ்ரீ விஜய லக்ஷ்மி பிக்சர்ஸ்’ என்ற தனது.. சொந்த திரைப்படக் கம்பெனியை நிறுவி..

‘நவராத்திரி’  என்னும் திரைப் படத்தை.. தயாரித்து.. இயக்கினார்..!

1964 இல் வெளியான..அந்தப் படம் பல சரித்திர சாதனைகளை..உருவாக்கியது!

சிவாஜி கணேசன் அவர்களின் நூறாவது படமாக நவராத்திரி திரைப்படம்.. வெற்றி வாகை.. கூடியது..

சிவாஜி கணேசன் அவர்கள் …. ஒன்பது.. வித்தியாசமான வேடங்களில் நடித்து.. வரலாறு படைத்தார்.. அந்தக் கால கட்டத்தில்.. அது.. இந்திய அளவில்.. ஒரு சாதனை!

ஒன்பது..விதமான.. பாத்திரங்கள்..! நடை.. உடை.. பாவனைகள்..!

Body Languages!..

திரைப் பட நடிப்பிற்கு ஒரு Text – Book ஆக..

சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு.. விளங்கியது!..

ஒன்பது.. இரவுகளில்.. நடைபெறும். ஒன்பது.. வகையான சம்பவங்கள்.. திருமதி.. சாவித்திரி.. அவர்களின் பண்பட்ட நடிப்பாலும்..  படம்..மேலும்.. சிறப்பு பெற்றது.!

ஒரே ஷாட்டில்….சிவாஜி கணேசன் அவர்கள்.. நடிக்கும்.. Mask.. Shots கள்.. அற்புதமாக இருந்தன..!

ஏ.பி.நாகராஜன் அவர்கள்.. அடுத்து.. தயாரித்து.. இயக்கிய படம்..

அவரை.. தெய்வீக இயக்குனராக உயர்த்தியது..

அந்தப் படம்..?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

 

Exit mobile version