Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்..ஆக்ஷன்.. அத்தியாயம். 36. இயக்குனர். ஏ.பி.நாகராஜன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன்.. அத்தியாயம். 36. இயக்குனர். ஏ.பி.நாகராஜன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன்..

அத்தியாயம். 36.

இயக்குனர். ஏ.பி.நாகராஜன்.

நவராத்திரி திரைப் படத்தை தொடர்ந்து ஏ.பி.நாகராஜன் அவர்கள் தமிழ்த் திரைப் பட உலகில் என்றென்றும் சாகா வரத்தோடு நிலைத்து நிற்கக் கூடிய ஐம்பெரும் தெய்வீக காப்பியங்களாக ஐந்து திரைப் படங்களை வார்த்து தந்தார்!…

‘திரு விளையாடல்! ‘சரஸ்வதி சபதம்’!..

‘கந்தன் கருணை’!.. ‘திருவருட் செல்வர்’ ‘திருமால்  பெருமை’ போன்ற புராணப் படங்களை… திரைப் பட வேதங்களாக… வழங்கினார்…

இந்து மதத்தின் தெய்வீக கோட்பாடுகளை வெளிப் படுத்திய புராணங்களை  எளிமைப் படுத்தி …. பிரம்மாண்டமான முறையில்…

அழகிய தெய்வீகத் தமிழில் …

தமிழ்த் திரைவானில் வரும்.. வந்த.. நட்சத்திரங்கள்.. சிவாஜி கணேசன் அவர்கள் … ஜெமினி கணேசன் அவர்கள் … திருமதி.சாவித்ரி அவர்கள் …  திருமதி பத்மினி அவர்கள் … திருமதி. கே.ஆர்.விஜயா அவர்கள்…நாகேஷ் அவர்கள்… டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் ..டி.எஸ் ..பாலையா அவர்கள் … சிவக்குமார் அவர்கள் …செல்வி ஜெயலலிதா அவர்கள் என.. நடித்த … அனைத்து படங்களும் வரலாறு காணாத வெற்றியைப் படைத்தன.! ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற ‘பாட்டும் நானே… பாவமும் நானே’.. என்ற பாடல் காட்சியில் …. சிவாஜி கணேசன் அவர்கள்  வெவ்வேறு விதமான தோற்றங்களுடன் இசையோடு கலந்து  நடித்த Mask – Shots கள் இன்றும் பிரமிக்க வைக்கின்றன!

இசைக்கு ஏற்ப.. வாத்திய ஓசைக்கு ஏற்ப.. கை விரல்களும் முக பாவங்களும் …. வாயசிப்புகளும் …. விதவிதமான வகைகளில் வெளிப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு…. தெய்வீக கடலாக இன்றும் விளங்கிக்  கொண்டிருக்கிறது!

‘சரஸ்வதி சபதம்’ … திரைப் படத்தில்..மனிதனுக்கு தேவை கல்வியா? செல்வமா? வீரமா? என்ற தத்துவத்தை முப் பெருந் தேவிகளின் கதா பாத்திரங்களை  வைத்து ஏபி நாகராஜன் அவர்கள் வடித்திருந்த திரை மொழி பிரமிக்க வைத்தது!

‘கந்தன் கருணை’  படத்தில்.. தமிழ் கடவுள் முருகனின்  தெய்வீக..வாழ்க்கையும் … அறுபடை வீடுகளின் மகிமையும்.. வெளிப் பட்டு.. பட்டி தொட்டி எங்கும் முருகனின் புகழ்.. ஒலித்தது!

திருவருட் செல்வர் திரைப் படம்.. சேக்கிழாரின் பெரிய புராணத்தை மையப் படுத்தி.. நாயன்மார்களின் தெய்வீகக் கதைகளை திரை ஓவியமாக தந்தது. காஞ்சிப் பெரியவரின் திரு உருவைப் போல.. சிவாஜி கணேசன் அவர்கள்.. அப்பராக தோன்றி…நடித்தது.. பெரும்.. பாராட்டுக்களைப் பெற்றது!.

‘திருமால் பெருமை’… படம் விஷ்ணு பகவானின்  புகழை வெண் திரையில்.. தரிசிக்க வைத்தது !

இப்படி.. புராணப் படையெடுப்பை.. நிகழ்த்திய.. ஏ.பி.நாகராஜன் அவர்கள்..

தமிழ்.. மண்ணின்.. பாரம் பரியத்தைப் பறை சாற்றும்.. விதமாக..

பரதத்தையும்… நாதத்தையும் மையப் படுத்தி..’தில்லானா மோகனாம்பாள்’

என்ற திரைப் படத்தை உருவாக்க முடிவு செய்தார்!..

கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் 1957- 58 வாக்கில் ஆனந்த விகடனில் வெளி வந்த  தொடர் கதைதான்.. தில்லானா மோகனாம்பாள்!.. 

வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றிருந்தது!. அந்த தொடர் கதையின் உரிமையை எஸ்.எஸ்.வாசன் அவர்கள் வாங்கி வைத்திருந்தார்!

ஏ .பி .நாகராஜன் அவர்கள் இரண்டு முறை கேட்ட போதும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அந்த கதையின் உரிமையை வழங்கவில்லை!..

ஆனால் மூன்றாவது முறையாக கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் அந்த நாவலின் உரிமையை ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு தர சம்மதித்தார்!

அதற்காக ஏ.பி நாகராஜன் அவர்கள் எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு பிறகு கொத்தமங்கலம் சுப்பு.. அவர்களுக்கும் பத்தாயிர ரூபா ய் பணம் கொடுக்கச் சென்றார்!

அந்தப் பணத்தை சுப்பு அவர்கள்.. வாங்க மறுத்துவிட்டார்!

ஏற்கெனவே எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தனக்கு 25000 ரூபாய் தந்து விட்டதாக சொன்னார்!.. அதுவே போதும்.. என்று சொல்லி விட்டார்!

இப்படி கலை மேதைகளின் பெருந் தன்மை படத்திற்கு நல்ல  ஆரம்பத்தைத் தந்தது!..

படத்தின் நாயகன் பாத்திரம்.. நாதஸ்வர வித்துவான் சண்முக.. சுந்தரம்!..

அந்த பாத்திரத்தில் நடிக்க சிவாஜி கணேசன் அவர்கள் தன்னை பல வகையில் தயார் செய்து கொள்ள வேண்டிய நிலைமை வந்தது!

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக் கலைஞராக நடிக்க சிவாஜி கணேசன் அவர்கள் …. என்னென்ன செய்தார்?

(தொடரும்).

– இயக்குநர் நித்தியானந்தம்

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments