Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 38. இயக்குனர். ஏ.பி.நாகராஜன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 38. இயக்குனர். ஏ.பி.நாகராஜன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்

அத்தியாயம். 38.

இயக்குனர். ஏ.பி.நாகராஜன்.

ராஜராஜ சோழன்….தமிழகத்தை பல்லாண்டுகள் ஆட்சி செய்த பேரரசன்! அவரது வரலாற்றை மையப் படுத்தி பல நாவல்கள் …. நாடகங்கள் …. உருவாகின..

1955 இல் அருளால் ராஜராஜ சோழன் ராமநாதன் என்ற நாடக ஆசிரியரால் எழுதப்பட்ட நாடகம் ‘ராஜ ராஜ சோழன்’.. அதனை டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகமாக அரங்கேற்றி 18  வருடங்கள் தொடர்ந்து நடித்து வந்தார்கள்!.

2,000 முறைகளுக்கு மேலாக மேடை ஏறிய நாடகம்!..

அந்த நாடகத்தை தயாரிப்பாளர்  ஜி.உமாபதி அவர்கள் ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் ராஜ ராஜ சோழனாக நடிக்க ….தயாரித்தார்! 

முதல் முறையாக தமிழில் சினிமாஸ் கோப்பில் எடுக்கப் பட்ட திரைப் படம்!.. சிவாஜி கணேசன் அவர்கள் முறுக்கு மீசையுடன் கம்பீரமாக நடித்த படம்! அவரோடு குந்தவை வேடத்தில் திருமதி லட்சுமி அவர்களும்… பால தேவர் இடத்தில் எம்.என்.நம்பியார் அவர்களும் சிறப்பாக நடித்த படம்! குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார்!

தஞ்சை பெரிய கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் அந்தக் கோயிலை செட் போட்டு எடுத்தார்கள்.. 

படம் 1973 இல் வெளியானது!

படத்தின் ரிலீஸ் வரலாறு காணாத அளவுக்கு அமைந்தது!

யானை மீது படப் பெட்டிகளை திரையரங்குக்கு கொண்டு வந்தார்கள்! வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் படப் பெட்டிகளுக்கு மலர்த் தூவினார்கள்! இத்துணை சிறப்பு வாய்ந்த அந்த படம் வியாபார ரீதியான வெற்றியை பெற்றது!..

ஆனால் விமர்சன ரீதியான தோல்வியை சந்தித்தது!

ராஜ ராஜ சோழன் என்கின்ற ஒரு வீர மன்னனின் வரலாற்றில் போர் காட்சிகளும் சண்டை காட்சிகளும் இல்லாமல் வெறும் அரங்கங்களுக்குள் காட்சிகள் அமைக்கப்பட்டு குடும்ப உறவுகளின் பிரச்னைகளை மையப்படுத்திய காட்சிகள்.. ஒரு நாடக அனுபவத்தையே  தந்தது!

இதன் விளைவாக வெகு காலம் சினிமாஸ் கோப்பில் எடுத்தால் ராசி இல்லை என்ற மனோ பாவம் தமிழ் திரைப்பட உலகில் வெகு காலம் நீடித்தது!

அதை 1985 இல் வெளி வந்த ‘ஊமை விழிகள்’… சினிமாஸ்கோப் படம் தான் மாற்றி அமைத்தது!

ஏ.பி.நாகராஜன் அவர்கள் அதற்குப் பிறகு வேறு சில படங்களை இயக்கினார்!.

பொருளாதார ரீதியாக வீழ்ச்சியை சந்தித்தார்!

1977 கால கட்டத்தில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நவரத்தினம் என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார்!.எந்த சம்பளமும் வாங்கிக் கொள்ளவில்லை! 

அது மட்டும் அல்ல!.. தனது சத்யா ஸ்டூடியோவிலேயே செட்டுகளை மலிவு விலையில் போட்டுக் கொள்ள உதவி செய்தார்!

அவர் உதவி செய்தும்.. கதைக்களம் வித்தியாசமாக அமைந்தும் படம் வெற்றி பெறவில்லை!.

ஏ.பி.நாகராஜன் அவர்கள்..அவரது 

47 வது வயதில்  ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார்!.. அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் இன்னும் நிறைய சாதனை படங்களை தந்திருப்பார்!.. ஆனால் அவர் உயிருடன் இருந்தவரை தந்த படங்களே  உயிர்ப்போடு  நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது..! என்றும் வாழும்!..

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments