Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட். ஆக்ஷன் அத்தியாயம். 39. இயக்குனர். ஸ்ரீதர் - சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட். ஆக்ஷன் அத்தியாயம். 39. இயக்குனர். ஸ்ரீதர் – சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட். ஆக்ஷன்

அத்தியாயம். 39.

இயக்குனர். ஸ்ரீதர்.

40 …50 வயதை தாண்டியவர்கள் தான் திரைப்படத் துறையில் எழுத்தாளர்களாக …. இயக்குனர்களாக வர முடியும் என்ற கால கட்டத்தில் தன் 19 வயதிலேயே திரைப் படத் துறையில் சாதித்தவர்!

காதல்…சோகம்… நகைச்சுவை.. குடும்ப சிக்கல்கள்.. சமூகப் பிரச்சனைகள் என்று  பல ரசங்களிலும் படங்களை இயக்கியதால்  நவரச இயக்குனர் என்று பெயர் எடுத்தவர்!

இளைஞர்களின் இயக்குனராக வலம் வந்தவர்!

இத்தனை அடை மொழிக்கும் சொந்தக்காரர்… இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள்!

அவர் பிறந்த வருடம்..1933…

படித்த காலத்திலேயே நாடகங்கள் எழுதி 19 வயதிலேயே நாடகம் ஒன்றை எழுதி அதை .. இயக்குனர் ப.நீலகண்டனிடம்.. தந்தார்! அவரால்.. அதை.. உபயோகப் படுத்திக் கொள்ள முடியவில்லை!

ஆனால்.. அந்த நாடகத்தைப் படித்த.. டி.கே சண்முகம் அவர்கள் ‘ரத்த பாசம்’ என்ற பெயரில் நாடகமாக அரங்கேற்றினார்..! நாடகம்.. பெரும்.. வெற்றி பெற்றது!

அதனால்.. டி.கே. சண்முகம் அவர்கள்.. அந்த நாடகத்தை  ‘ரத்த பாசம்’..என்ற பெயரிலேயே  திரைப் படமாக ஜுபிடர் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்தார்…

அந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத பல பெரிய பிரபலமான எழுத்தாளர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் … ஸ்ரீதர் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என்பதில்.. 

டி.கே.சண்முகம் அவர்கள் உறுதியாக இருந்தார்! அதுவே நிகழ்ந்தது!

‘ரத்த பாசம்’.. திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது!

இளம் வயது ஸ்ரீதர் திரைப்பட உலகில் அழுத்தமாக காலூன்றினார்!

இலக்கண ரீதியாகவும் செந்தமிழிலும் கதாபாத்திரங்கள் வசனம் பேசும் நிலையை மாற்றி யதார்த்தமான … இயல்பான … தமிழில் கதா பாத்திரங்கள் வசனம் பேசும் பாணியை ஸ்ரீதர் அவர்கள் உருவாக்கினார்!

பல படங்களுக்கு கதை…திரைக்கதை வசனம்  எழுதினார்!..

1955 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்காக ‘மகேஸ்வரி’.. என்ற படத்தில் பணியாற்றிய போது டி.ஆர். சுந்தரம் அவர்களிடம் திரைப்பட தயாரிப்பு நுணுக்கங்களையும் ….இயக்க நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்! டி.ஆர்.சுந்தரம் அவர்கள் வைத்திருந்த மிகப் பெரிய திரைப்பட நூலகத்தில் படித்து தன்னுடைய திரைப் பட அறிவை பெருக்கிக் கொண்டார்!..

அதன் விளைவு ?..

1956 இல் கிருஷ்ணமூர்த்தி அவர்களோடும் … கோவிந்தராஜ் அவர்களோடும்  சேர்ந்து ‘வீனஸ் பிக்சர்ஸ்’… என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து ‘அமரதீபம்’… மற்றும் ‘உத்தமபுத்திரன்’… திரைப் படங்களை தயாரித்தார்! அந்தப் படங்களின் திரைக் கதை – வசனத்தையும் எழுதினார்!..

படங்கள் பெரும் வெற்றி பெற்றன! 

1959 இல் இயக்குனரானர்..

‘கல்யாண பரிசு’ ….. அவர் இயக்கிய முதல் திரைப் படம்!..

ஒரு முக்கோண காதல் கதை..!

இளமை தழும்பும் காதல் காட்சிகள்….

வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் !.. என்று ‘கல்யாணப் பரிசு’ திரைப் படம் ஒரு புதிய ட்ரெண்ட் செட்டராக அமைந்தது! 

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது!.. அந்தப் படத்தில் ஆங்கிலப் படங்களில் பெரும்.. அளவு.. எடுக்கப் படும்..SuggShots வகை.. ஷாட்டுகளை எடுத்தார்!

அவையெல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய கோணங்களாக விருந்து படைத்தது!

1961 இல்….‘சித்ராலயா’  ….என்ற தயாரிப்பு நிறுவனத்தை …. தன் நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தார்!

அந்த நிறுவனத்தின் முதல்..படமாக 

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்ற கதையை ஸ்ரீதர் அவர்கள் உருவாக்கினார்!..

ஆனால் முதல் படமே சோகப் படமாக இருக்க வேண்டாம் என்று மற்ற பார்ட்னர்கள் எண்ணியதால் ஒரு கலகலப்பான மாறுபட்ட காதல் கதை ஒன்றை எடுக்கலாம் என்று ஸ்ரீதர் அவர்கள் முடிவு எடுத்தார்!

அந்தக் காலத்தில் காஷ்மீரில் தமிழ் படங்கள் எடுக்கப்பட்டது கிடையாது! முதல் முறையாக பெரும்பாலான காட்சிகளை காஷ்மீரில் எடுக்க முடிவெடுத்தார்! அதற்கான கதைக் களத்தை அமைத்தார்!

ஜெமினி கணேசன் அவர்கள் கதாநாயகனாக நடிக்க எம்.என். நம்பியார் அவர்கள் …. கே.ஏ.தங்கவேலு அவர்கள் பிரதான வேடங்களில் நடிக்க. திருமதி வைஜெயந்தி மாலா அவர்கள் பிஸியாக இருந்த நேரத்திலும்.. இந்தப் படத்தில்.. நடிக்க.. சம்மதித்தார்.!

சென்னையில்  படப்பிடிப்பு  ஆரம்பமானது! இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி படமாக்கப்பட்டது!

மெரீனா கடற்கரைக்குப் பக்கத்தில்.. புதிதாக கட்டப் பட்ட கட்டிடங்கள்.. காட்சியின் பின்னணியில்.. ஒரு.. வரலாறாய்ப் பதிவானது!

படக் குழுவினரோடு காஷ்மீருக்கு பயணம் ஆனார் …. ஸ்ரீதர் அவர்கள்!.. ‘காஷ்மீருக்கு போனா கேஷ் மீறுமா?’ என்ற தங்கவேலு அவர்களின் நகைச்சுவை வசனத்திற்கு ஏற்ப பணம் பனியாய்.. கரைந்தது..!

காஷ்மீரில் படப் பிடிப்பின் போது.. ஸ்ரீதர் அவர்கள் பட்ட சிரமங்கள் ?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments