Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 46. இயக்குனர். கே.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 46. இயக்குனர். கே.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்

அத்தியாயம். 46.

இயக்குனர். கே.பாலச்சந்தர்.

தீபாவளி நாளில் வெளியான சோக மயமான படம் …. மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றது

நீர்க்குமிழி நீர்த்துப் போகவில்லை! கே பாலச்சந்தர் என்ற இயக்குனருக்கு நல்ல அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தது!

நகைச்சுவை நடிகராக வெற்றிக் கொடி நாட்டி வந்த நாகேஷ் அவர்களின் ஆழமான சோக நடிப்பு அனைவரின் மனதையும் உலுக்கியது!

கன்னி நதி ஓரம்என்ற பாடல் காட்சிக்கு அவர் மேடையில் ஆடும்  நடன அசைவுகள்…. இன்றைக்கும் பலரால் ஆடப் பட்டு வருகிறது!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

என்ற பாடலின் வாழ்க்கை யதார்த்தம்  இன்றும் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றது….

1966 இல்.. நாணல் என்ற திரைப் படத்தை இயக்கினார்!

‘Desperate hours’ என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில்

கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய படம் …. ‘நாணல்’… இன்றைக்கு ஒரே பங்களாவுக்குள் நடக்கும் கதைக் களத்தை வைத்து பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன!

அந்த படங்களுக்கு எல்லாம் அட்சாரமாக …. சில கொலைகாரர்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் உள்ள நல்லவர்களை துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு சித்ரவதை செய்யும்.. திரில்லர் வகை படம் நாணல்!

பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே நிகழும்!

கே பாலச்சந்தர் அவர்கள் கேமரா கோணங்களையும் தொழில் நுட்ப நுணுக்கங்களையும் மேலும் மெருக்கேற்றிக் கொண்ட திரைப்படம் நாணல்’…

1967-ல் மேஜர் சந்திரகாந்த் என்ற  நாடகத்தை கே.பாலச்சந்தர் அவர்கள் எழுதினார்.!

அந்த நாடகத்தை திரைப் படமாக அவரே இயக்கினார்! முற்றும் முழுக்க வித்தியாசமான கதைக் களம்!

கண் பார்வையற்ற ஒரு மேஜர்!… அவரது மகளை கொன்ற ஒரு கொலைகாரனுக்கு தன் வீட்டிலேயே அடைக்கலம் தரும் வித்தியாசமான திரைப்படம்!..

ஒரு பாரசீக கவிதையை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்! செல்வி ஜெயலலிதா அவர்கள் நாயகியாக நடித்தார்!..

திரைக் கதை …. வசனம் மற்றும் தொழில் நுட்ப யுக்திகளில் சிறப்பான படமாக மேஜர் சந்தரகாந்த் படத்தை கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கியிருந்தார்!

படம் நல்ல வெற்றி பெற்றது!

சுந்தர்ராஜன் அவர்களுக்கு மேஜர் சுந்தர்ராஜன் என்ற பெயர் நிலைத்து விட்டது!…

பாமா விஜயம்’.. ‘அனுபவி ராஜா அனுபவி’… போன்ற திரைப் படங்கள் ….நகைச்சுவையை மையப் படுத்தி  அவர் இயக்கிய வித்யாசமான படங்கள்!

1969 இல் அவர் இயக்கிய இரு கோடுகள்’.. மறக்க முடியாத ஒரு குடும்பச் சித்திரம்!

காதலர்கள் இருவரும் சந்தர்ப்பச் சூழலால் பிரிந்து காதலி கலெக்டராகி அந்த கலெக்டரிடமே குமாஸ்தாவாக வேறொரு பெண்ணின் கணவனாக உலவும் சூழல்!..இதில் நாயகி படும் பாடு!.. என்ற வித்தியாசமான கதைக் களம்!

வசனங்களில் தெறித்த சிலேடைகள் பாராட்டப்பட்டன…! குடும்ப உறவுகளை வைத்து படங்களை இயக்கி வந்த அவர்   பிரச்னைக்குரிய கதைக் களம் ஒன்றை தேர்ந்தெடுத்தார்!

பிராமண குடும்பத்தில் வாழும் நாயகி குடும்ப நலனுக்காக செய்யும் செயலை.. மையப்படுத்தி அவர் இயக்கிய அந்தப் படம்..

அணுகுண்டாய்.. தமிழ்த் திரையுலகை அதிர வைத்தது.. அந்தப் படம்?

(தொடரும்)

 

– இயக்குநர் நித்தியானந்தம்
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments