Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் .. ஆக்ஷன். அத்தியாயம்.48. இயக்குனர் .கே.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன். அத்தியாயம்.48. இயக்குனர் .கே.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்.

அத்தியாயம்.48.

இயக்குனர் .கே.பாலச்சந்தர்.

அபூர்வ ராகங்கள்!..

இது 1975 இல் கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய திரைப்படம்!  அபூர்வ ராகங்களில் ஒரு அபூர்வம் நிகழ்ந்தது..

சிவாஜி ராவ் என்கின்ற பெங்களுரைச் சேர்ந்த புது முக நடிகரை ரஜினிகாந்த் என்ற பெயரில் தமிழ் திரை உலகுக்கு கே பாலச்சந்தர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த அபூர்வ நிகழ்வுதான் அது...

கமலஹாசன் அவர்களோடு திருமதி ஸ்ரீவித்யா.. திருமதி ஜெயசுதா அவர்கள் மேஜர் சுந்தரராஜன் அவர்கள்.. மற்றும் நாகேஷ் அவர்கள்..நடிக்க ரஜினிகாந்த் அவர்கள் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்..

அவரது தோற்றம் அவரது நடிப்பு மேனரிஸம் அனைத்தும் தமிழ் திரையுலகுக்கு ஒரு பிரகாசமான வரவு கிடைத்து விட்டது என்பதை உணர்த்தியது!

K balachander

சிக்கலான கதைக் களம்!

அப்பாவைப் பிரிந்து வாழும் கதாநாயகன்ஒரு புறம்..!

மகளை பிரிந்து வாழும்.. பாடகி.. ஒரு புறம்..!

சந்தர்ப்பச் சூழலால் நாயகனின் தந்தையை பாடகியின் மகள் காதலிக்க.. பாடகியை  நாயகனும் காதலிக்க.. நெருடலான  கதைக் களம்!..Inter generation romance பாணி திரைப் படம்..!

ஒரு பழமொழியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை! ஆனால் எந்த கலாச்சார மீறல்களும் இல்லாமல் மரபு ரீதியான நெறி மாறாத நல்ல முடிவு படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..!

கர்நாடக..இசைக்கும்.. பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்ட பல காட்சிகளால் ஒரு கவித்துவமான இசை காவியமாகவும்.. அபூர்வ ராகங்கள் பேசப்பட்டது !

நறுக்கென்ற வசனங்கள்..தாயும்.. மகளும்.. சந்திக்கும் இடத்தில்.. இருவரும் பாடும்.. பாடலில்.. அவர்கள்.. வாழ்க்கை பிராயத்துக்கான கேள்விகளுக்கு.. பதில்.. சொல்லி.. பாடும்.. வரிகள்.. பாடல்.. காட்சிகளின்.. மகுடம்!..

கேள்வியின் நாயகனேஎன்ற அந்தப் பாடலில்..கதாபாத்திரங்கள்.. இடம் மாறி.. தங்கள்.. பதில்களை பதிவு செய்யும்.. காட்சியமைப்பு.. பாராட்டப் பட்டது..

சர்ச்சைக்குரிய படமாக இருந்தாலும் மூன்று தேசிய விருதுகளை பெற்றது!

அதில் சிறந்த தமிழ் படத்துக்குரிய தேசிய விருதும் அடங்கும்!

கே.பாலச்சந்தர் அவர்கள் அதற்குப் பிறகு கமலஹாசன் அவர்களை வைத்து பல படங்களை இயக்கினார்!

1976 இல் அவர் இயக்கிய படம்

மன்மத லீலை’…

பல வருடங்கள் கழித்து வந்திருக்க வேண்டிய படம் முந்திக் கொண்டு வந்தது!

ஒரு Cult film ஆக இன்றும் விளங்கி வருகிறது!

1976 இல் வெளியானமூன்று முடிச்சு என்ற திரைப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்த்தினார்!

கமலஹாசன் அவர்களை வைத்து அவர்1978 இல் தெலுங்கில் இயக்கிய மரோ சரித்திரா வருடக்கணக்கில் ஓடி சரித்திர சாதனை புரிந்தது!

ஏக் துஜே கே லியே என்ற பெயரில் இந்தியிலும் கமலஹாசன் அவர்களை வைத்து  அந்தப் படத்தை இயக்கினார்!

1980 இல்..வேலையில்லா பட்டதாரிகளின் வலியை சொல்லும் வறுமையின் நிறம் சிகப்பு’.. திரைப்படத்தை மிகவும் வித்தியாசமான முறையில் இயக்கினார்!

1985-ல் அவர் இயக்கிய சிந்து பைரவி இன்னுமொரு அற்புதமான திரைப்படம்!.

பார்த்தாலே பரவசம்திரைப்படம்.. அவரது நூறாவது படமாக 2001 இல் வெளி வந்தது!..

2006 வரை தொடர்ந்து பயணித்த அவர் எண்பது படங்களை இயக்கியிருக்கிறார்!

கிட்டத் தட்ட நூறு படங்களில் பணி புரிந்திருக்கிறார்!

படங்களை தயாரித்திருக்கிறார்!..

நூற்றுக்கும் மேலான புதுமுகங்களை அறிமுகம் செய்திருக்கிறார்!

அவரது கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் மூலம் வேறு பல இயக்குனர்களை வைத்தும் பல வெற்றி படங்களை பிரபல நடிகர்களை வைத்து  தயாரித்திருக்கிறார்!

2003 இல் பாலச்சந்தர் அவர்கள் தயாரிப்பில் வெளி வந்த திருமலை திரைப்படம் விஜய் அவர்கள் ஆக்சன் ஹீரோவாக உருவாவதற்கு வழி வகுத்தது.!

வித்தியாசமான சர்ச்சைக்குரிய கதைகளை தேர்வு செய்வது அறிவுப்பூர்வமான வசனங்கள்.. நேர்த்தியான காட்சிகள்.. unique Takings.. Symbolic shots..Metaphor shots… நல்ல இசை நடிகர்களை வேலை வாங்கும் விதம்.. என்று எல்லா வகைகளிலும் சிறப்பின் சிறப்பாக விளங்கினார்!

பற் பல விருதுகள்!. பத்மஸ்ரீ விருது.. என புகழாரம் சூட்டப்பட்டார்!

அவர் கலைத் துறையில் ஆற்றிய பணிக்கு பெருமை காட்டும் விதமாக 2010  இல்  இந்திய திரைப் படத் துறையின் உயரிய விருதான..தாதா சாகிப் பால்கே விருது ஜனாதிபதி  அவர்களால் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டது…!

2014 ஆம் ஆண்டு அவர் நம்மை விட்டு பிரிந்தார்..

அவர் தன் படங்களில் பேசிய பெண்ணியம் தனித்துவமானது!

அவர் திரைப் படங்களை நினைத்தாலே இனிக்கும் !

அவர் திரைப்படங்களின் சிறப்புக்கு வானமே  எல்லை!

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments