Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்..ஆக்ஷன். அத்தியாயம். 50. இயக்குனர் பாரதிராஜா- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன். அத்தியாயம். 50. இயக்குனர் பாரதிராஜா- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்..ஆக்ஷன்.

அத்தியாயம். 50.

இயக்குனர் பாரதிராஜா.

தமிழ் மண்ணின் மணம் கமழ.. திரைப் படங்களை இயக்கி இயக்குனர் இமயமாக வலம் வந்து கொண்டிருப்பவர்!

ஆறு  தேசிய திரைப்பட விருதுகள்! ஆறு மாநில திரைப் பட விருதுகள்! நான்கு ஃபிலிம் ஃபேர் விருதுகள்! ஒரு நந்தி விருது!.. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது என சாதனை புரிந்தவர்!.. அவர்தான் இயக்குனர் பாரதிராஜா அவர்கள்

மதுரையில் உள்ள அல்லி நகரத்தில் பிறந்து அகில உலகத்தையும் தன் திரைப்படங்கள் மூலமாக கட்டிப் போட்டவர்!

சிறு வயதிலேயே நடிப்பிலும் நாடகங்களை இயக்குவதிலும் ஆர்வமாக செயல்பட்டு தன்னை உருவாக்கிக் கொண்டவர்!  திரையுலகில் சாதிக்க சென்னை மாநகர் வந்துவயிற்றுப் பிழைப்புக்கு பல வேலைகளைச் செய்து…

பிறகுகன்னட திரைப் பட உலகின் ஒப்பற்ற இயக்குனராக விளங்கி வந்த இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்! இயக்குனர்கள் ஏ.ஜெகநாதன் அவிநாசி மணி ரா.சங்கரன் ஆகியோரிடமும் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார்!..

1977 இல் 16 வயதினிலே படத்தை இயக்கினார்!

முழு  திரைப் படத்தையும் கிராமங்களிலேயே படம் பிடிக்கும் பாணியை தேவராஜ் மோகன் அவர்கள் உருவாக்கியிருந்தார்! அந்த பாதையில்..ஜீவன் உள்ள யதார்த்தமான.. கீழ்த் தட்டு கதாபாத்திரங்கள் மூலமாக …. கலைப் படத்திற்கான யுக்திகளோடு… வியாபார படத்திற்கான தேவைகளையும்.. இணைத்து .. நேர்த்தியான புதிய பாணி திரைப் படங்களுக்கு  ‘பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பாதை போட்டார்!..

பாரதிராஜாஅவர்கள் 16 வயதினிலே’… படத்தை முதலில் கறுப்பு வெள்ளை படமாக  NFDC  மூலம் நிதியுதவி பெற்று.. அவார்டுக்கான திரைப் படமாக   எடுக்கத்தான் பாரதிராஜா அவர்கள் முயற்சி செய்தார்! படத்திற்குமயில்என்று பெயரிட்டிருந்தார்!

கடைசி நேரத்தில்.. NFDC நிதி உதவி தர மறுத்து விட்டது!

பாரதிராஜா அவர்கள் தளர்ந்து போனார்!

ஆனால் காலம் அவருக்கு கை கொடுத்தது…!

தயாரிப்பாளர். எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்கள்.. சடையப்ப வள்ளல் போல வந்தார்!..

மயில் படத்தை வண்ணப் படமாக தயாரிக்க முடிவெடுத்தார்!

மயில்’…‘16 வயதினிலேஎன பெயர் மாற்றம் கண்டது!

அந்த நேரத்தில் கதாநாயகியாக வெற்றி கரமாக உருவாகி இருந்த ஸ்ரீதேவி அவர்கள்  மயிலாக நடிக்க..

புதிய புயலாக உருவாகியிருந்த ரஜினிகாந்த் அவர்கள் பரட்டை வேடத்தில் நடிக்க.

கமல்ஹாசன் அவர்கள் ஹீரோவாக சப்பாணி என்ற கதா பாத்திரத்தில் நடிக்க..

திரைப் படக் கல்லூரி மாணவர்.. நிவாஸ் அவர்கள்.. ஒளிப்பதிவை கையாள..

பாரதிராஜா அவர்கள்.. தன் இயக்குனர் பயணத்தை துவக்கினார்!

அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்த இளையராஜா அவர்கள் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் வெற்றி  விஸ்வரூபம் எடுத்தார்!

அழுத்தமான கதாபாத்திரங்கள்… வசனம்.. பாடல்கள்.. கிராமிய சூழல்கள்.. எல்லாம் சேர்ந்து.. படத்தை பார்ப்போரை வேறொரு உலகுக்கு கொண்டு சென்றது!

படத்தின் Takings.. டிராலி ஷாட்ஸ்.. சிம்பாலிக் ஷாட்டுகள் கதாபாத்திரமாகவே கேமரா.. செயல்படும்..சப்ஜெக்ட்டிவ் ஷாட்டுகள் என கதை சொல்லும் பாணியை வேறு ஒரு தளத்துக்கு பாரதிராஜா அவர்கள் கொண்டு சென்றார்!

அழகிய தோற்றம் கொண்ட கமல்ஹாசன் அவர்கள்.. தன் தோற்றத்தை அசிங்கமாக்கிக் கொண்டு காலை விந்தி நடந்து .. ஒரு காட்சியில் கோவணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு நடித்து நடிப்பில்.. புதுப் பரிமாணம் காட்டினார்!

தன் கணீர் குரலில் என் இனிய தமிழ் மக்களே!..’.என்று படத்துக்கு அறிமுகம் தந்து  படத்தை ஆரம்பிக்கும் வழக்கத்தை … 

16 வயதினிலே படத்தில் துவக்கினார்!

திரைப்படம் வெள்ளி விழா கண்டது!

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்பது போல் அன்றைக்கு இயக்குனர் சிகரமாக வலம் வந்த கே.பாலச்சந்தர் அவர்கள் பாரதி ராஜா அவர்களின் வருகைக்கு  புகழாரம் சூட்டினார்!

படத்திற்கு பல விருதுகள் குவிந்தன!

தன் முதல் படத்திலேயே விஸ்வரூப வெற்றி கண்டார் பாரதிராஜா அவர்கள்!

அதை ஒரு fluke  என்றார்கள் வேண்டாதவர்கள்!

அந்த விமர்சனத்தை தகர்க்க அவர் இயக்கிய….

அடுத்த படம்? அதன் முடிவு?..

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments