ஸ்டார்ட்.. ஆக்ஷன்.
அத்தியாயம். 54.
இயக்குனர். பாரதிராஜா.
முதல் மரியாதை படம் மூலம் கிடைத்த மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் தொடர்ந்து சத்யராஜ் அவர்கள் நடிக்க ‘கடலோர கவிதைகள்’.. என்ற திரைப் படத்தை இயக்கினார்!
கடல் சார்ந்த காதல் கதை!
நல்ல வெற்றியை பெற்றது!.. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய படம்தான் ‘வேதம் புதிது’
தேவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் பிராமண பெண்ணுக்கும் உருவாகும் காதல் எப்படி சாதிப் பிரளயமாக மாறுகிறது என்பதை …
கே.கண்ணன் அவர்கள் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’.. என்ற பெயரில் நாடகமாக எழுதி நடத்தி வந்தார்!
அந்த நாடகத்தைப் பார்த்த பாரதிராஜா அவர்கள் அதை தன் இயக்கத்தில் திரைப் படமாக்க முடிவு செய்தார்!
சத்சத்யராஜ் அவர்களை கதாநாயகனாக மூன்றாவது முறையாக தன் படத்தில் ஒப்பந்தம் செய்தார் இயக்கினார் கமல்ஹாசன் அவர்களின் அண்ணன் சாருஹாசன் அவர்கள் பிராமணராக நடித்த அமலா அவர்கள் அவரது மகளாக நடித்தார்!..
தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் சாதி அமைப்புகள் !…தமிழ் பிராமணியம்! சாதி என்ற பெயரில் மக்கள் மத்தியில் உலவும் பாசாங்குத் தனங்கள்!.. வெறி உணர்வுகள்! இவற்றையெல்லாம் மிக ஆழமாக தெளிவாக திரைப் படத்தில் காட்டினார்!
மக்கள் துறவி ஒருவரை சுமந்து செல்லும் காட்சிக்கும் …. திரைப் படத்தின் நாயகன் பாலு தேவர் அதைப் பற்றி சொல்லும் கருத்துக்கும் தணிக்கை வாரியம் ஆட்சேபம் தெரிவித்தது!.. தமிழ்நாடு பிராமண சங்கம் தடை விதிக்க கூறியது!..
ஆனால் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டு படம் திரையிட்டுக் காட்டப் பட்டது! அவர் படத்தின் கருத்துக்களை அனைத்துக்கும் பாராட்டுகளை அள்ளி வழங்கினார்!
சத்யராஜ் அவர்களின் நடிப்பையும் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தையும் வெகுவாக புகழ்ந்தார்!
‘வேதம் புதிது’ திரைப் படம் எந்த சிக்கலும் இல்லாமல் 1987 இல் வெளி வந்தது!.
வெள்ளி விழா படமாக சாதனை படைத்தது!..
புதிதாக உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் விருது முதல் முறையாக பாரதிராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது! நாடக ஆசிரியர் கே.கண்ணன் அவர்கள் வேதம் புதிது கண்ணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்!
இந்தத் திரைப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களை வைத்து ‘கொடி பறக்குது’ என்ற படத்தை இயக்கினார்!
கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்க.. எம். ரத்னகுமார் அவர்கள் கதை வசனம் எழுத..
‘கிழக்கு சீமையிலே’ என்ற படத்தை பாரதிராஜா அவர்கள் இயக்கினார்..! அண்ணன் தங்கை பாசத்தை கிராம சூழலில் மிக அழகாக வெளி காட்டினார் … தொடர்ந்து பல படங்களை இயக்கினார்!
நடிகராகவும் வெள்ளித்திரையில் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார் !
அவரது திரைப் படங்களில் வெளிப் பட்ட கலை நுணுக்கங்களும் …. நடிகர்களின் நடிப்பை அவர் கையாண்ட விதமும்…. கிராமத்து உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்திய கலை நயமும் …. அவரது படங்களை என்றென்றும் நம்மிடையே பேச வைத்துக் கொண்டிருக்கும்!
அவர் இயக்க நுணுக்கங்கள் எதிர்கால சந்ததிகள் பின்பற்றும் ஒரு திரை வேதமாக என்றென்றும் விளங்கும்!
அவரது கலை அலை ஓயாது!..
– இயக்குநர் நித்தியானந்தம்
