Sunday, March 22, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்.. ஆக்ஷன் அத்தியாயம். 56. இயக்குனர். மகேந்திரன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன் அத்தியாயம். 56. இயக்குனர். மகேந்திரன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன்

அத்தியாயம். 56.

இயக்குனர். மகேந்திரன்.

முள்ளும் மலரும் மகேந்திரன் அவர்கள் இயக்கிய முதல்  திரைப் படம்!

26 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் இயக்குனராக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு செய்த முதல் மாற்றம் தான் இயக்கும் படத்தில் மிகவும் குறைவான வசனங்களை எழுதியதுதான்!.. அந்தப் படத்தை இயக்கும்போது  டெக்னிக்கல்  துறைகளில் போதிய அறிவு இல்லாமல் இருந்த அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஒளிப்பதிவாளர்.. இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள்!

மகேந்திரன் அவர்களை நேர்த்தியாக வழி நடத்தி ஒரு நல்ல இயக்குனராக உருவாக துணை நின்றார்!..

ரஜினிகாந்த் அவர்கள் வாழ்வில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் முள்ளும் மலரும்!’

பெரும் வரவேற்பு பெற்ற பாடல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’..

இந்தப் பாடலை  படம் பிடிக்க பணத் தட்டுப்பாடு நேர்ந்த நேரத்தில் கமலஹாசன் அவர்கள் பிலிம் ரோல்கள் வாங்கிக் கொடுத்து படம் எடுக்க வைத்தார்!..

முள்ளும் மலரும்’  திரைப்படம் 1978 இல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது!

அந்த வெற்றியை தொடர்ந்து 1979 இல் வெளி வந்த உதிரிப்பூக்கள் படம் மகேந்திரன் அவர்களை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது!

புதுமைப் பித்தன் அவர்களின் சிற்றன்னை கதையை அடித் தளமாக வைத்து உதிரிப் பூக்கள் படத்தின் திரைக் கதை வசனத்தை எழுதி இருந்தார் மகேந்திரன் அவர்கள்!..

இந்தப் படத்திலும் வசனங்கள் திருக்குறள் அளவே இருந்தன.!

உதிரிப்பூக்கள் திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றது!

திரைப்படம் என்பது ஒரு விஷுவல் மீடியம்!.. மொழிகளை தாண்டிய ஒரு மொழி என்பதை அழுத்தமாக நிரூபித்தார் மகேந்திரன் அவர்கள்!

1980 இல் வெளி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே திரைப் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது!.. வெள்ளி விழா கண்டது!

சுகாசினி அவர்கள் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் படித்து வந்த கால கட்டத்தில் கதாநாயகியாக அறிமுகமான படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே’…

தொடர்ந்து பல வெற்றி படங்களில் சுகாசினி அவர்கள் நடித்தார்!

ரஜினிகாந்த் அவர்களை வைத்து .. விஸ்வரூபமாக வளர்ந்து வந்த அவரது இமேஜுக்கு மாறாக ஜானி என்ற திரைப் படத்தை இயக்கினார்!

இந்தப் படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் பாடலைப் படமாக்க.. தயாரிப்பாளர் செலவு செய்ய தயங்கிய  நிலையில் ஒரு மழையை மட்டும் பெய்ய வைத்து …. ஒரு மேடை கச்சேரி பாடலைஎந்த  வித ஆடியன்ஸும்.. ஆர்கெஸ்ட்ராவும்  நடிகரும் இல்லாமல் வித்தியாசமாக படமாக்கி மகேந்திரன் அவர்கள் சாதனை செய்தார்!..

இரண்டு மாறுபட்ட வேடங்களில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த அற்புதமான படம்..! பாடல்கள் அபாரம்!..

ரஜினிகாந்த் அவர்களோடு போட்டி போட்டது ஸ்ரீதேவி அவர்களின் நடிப்பு !

நண்டு’.. ‘மெட்டி’.. ஆகிய படங்கள் சரியாக அமையவில்லை!..

பல காலங்கள் ஓய்வில் இருந்து விட்டு தன் கடைசி காலங்களில் ஒரு நடிகராக திரும்பவும் திரை உலகில் வலம் வந்தார்!

2019 இல் நம்மை விட்டு மறைந்தார்!.

 மகேந்திரன் அவர்களின் முள்ளும் மலரும்’…

உதிரிப் பூக்கள்’.. ‘நெஞ்சத்தை கிள்ளாதே’… ஆகிய திரைப் படங்கள் முத்தான முக் காவியங்களாய் என்றென்றும் விளங்கிக் கொண்டிருக்கும்!

தமிழ்த் திரையுலகம்.. இன்று ஒரு visual medium ஆக.. பீடு நடை போடுவதற்கு மகேந்திரன் அவர்கள்.. போட்ட.. பாதை.. பிரதான.. காரணம்..!

அந்த முன்னோடி என்றும்.. நம்மோடு வாழ்வார்!

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments