ஸ்டார்ட்.. ஆக் ஷன்.
அத்தியாயம். 57.
இயக்குனர். பாலு மகேந்திரா.
தேசிய திரைப் பட விருதுகள் ஆறு!.
அவற்றில் இரண்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக!…
மூன்று சிறந்த இயக்கத்துக்காக!.. ஒன்று சிறந்த படத் தொகுப்புக்காக!..
இப்படி திரைப் படத் துறையின் முக்கியத் துறைகளில் விருது பெற்ற கலை வித்தகர்… அந்நிய மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் சிறப்பு பெற்றவர்…
இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள்!…
அவர் 1939 இல் இலங்கையில் பிறந்தார்!
பாலு மகேந்திரா அவர்களுக்கு படிக்கும் காலத்திலேயே கலை… இலக்கியம்.. மீது தீவிரமான ஈடுபாடு..!
இலண்டனில் படிப்பை முடித்து விட்டு இலங்கையில் படிப்பை தொடர்ந்து …. அதற்குப் பிறகு ஏரியல் போட்டோகிராபராக இலங்கையில் பணி புரிந்தார்! அந்த கால கட்டத்தில் தேனருவி என்ற தமிழ் இதழையும்
நடத்தினார்!
அதற்குப் பிறகு இந்தியா வந்து 1966 ஆம் ஆண்டு புனாவில் உள்ள திரைப் படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றார்! பயின்ற காலத்தில் ஒளிப்பதிவு துறைக்கான வகுப்புகளை தவிர்த்து இயக்குனர் பிரிவுக்கான வகுப்புகளிலும் படத் தொகுப்புக்கான வகுப்புகளிலும் கலந்து கொண்டு திரையுலக அறிவை வளர்த்துக் கொண்டார்! உலகத் திரைப் படங்களால் ஈர்க்கப்பட்டார் !
இயக்குனர். சத்யஜித் ராய் அவர்களின் பதேர் பாஞ்சாலி திரைப் படம் அவருக்கு மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது!
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க இயக்குனர் டேவிட் லீன் அவர்கள் ‘Bridge On The River Kwai’ என்ற திரைப் படத்திற்கான சில காட்சிகள் இலங்கையில் படம் பிடிக்கப் பட்டபோது அதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தையும் பெற்றார்!
திரைப் படக் கல்லூரியில் Gold Medalist தேர்வு பெற்று சில மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்!
செம்மீன் பட இயக்குனர் ராம் காரியத்தின் ‘நெல்லு’ படம் பாலு மகேந்திரா அவர்களுக்கு பாராட்டைப் பெற்று தந்தது..
Natural lightings.. பாணியை பின் பற்றினார்..
வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக உருவானார்! 20 திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்!
1977-ல் ‘கோகிலா’ என்ற கன்னட படத்தை முதல் முறையாக இயக்கினார்!
அதைத் தொடர்ந்து 1978 இல் ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தை தமிழில் முதல் முறையாக இயக்கினார்!
அந்த படம் ‘Summer of 42’ என்ற படத்தின் தாக்கமாக உருவானது! அது ஒரு வித்தியாசமான திரைப் படமாக பாராட்டப் பட்டது! பாரதிராஜா.. மகேந்திரன்… இவர்களோடு பாலு மகேந்திரா என்ற மூன்றாவது வேந்தரும் இணைந்து தமிழ் திரையுலகை புதிய பாணியில் நடத்திச் செல்ல ஆரம்பித்தார்கள்!..
1978 இல் கே.விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த ‘சங்கராபரணம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பெரும் பாராட்டைப் பெற்றார்!..
1980 ஆம் வருடம் ‘மூடுபனி’ என்ற திரில்லர் படத்தை இயக்கினார்! படத்துக்கு கதை எழுதி … ஒளிப்பதிவு செய்து … படத் தொகுப்பு செய்து …இயக்கி …. ஒரு தரமான பிலிம் மேக்கராக உருவானார்!
Alfred Hitchcock…அவர்களின் சைக்கோ பட சாயலில் ‘மூடுபனி’ படம் அமைந்தது!
அடுத்து.. 1982 இல் அவர் உருவாக்கிய திரைப் படத்தால்
பாலு மகேந்திரா அவர்களுக்கு பெரும் பாராட்டு கிடைத்தது!.. அந்த திரைப்படம்…?
அகில இந்திய அளவில் விருதுகளை அள்ளிய அந்த திரைப் படம்?..
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
