ஸ்டார்ட் … ஆக் ஷன்
அத்தியாயம் 8.
இயக்குனர் எம்.ஜி.ஆர்.
நாடோடி மன்னன் படத்தின் விளம்பரம் பத்திரிகையில் வெளி வந்த இரண்டு தினங்களிலேயே …. நடிகை திருமதி.பானுமதி அவர்களும் அவரது கணவரும் சேர்ந்து நிறுவியிருந்த பரணி பிச்சர்ஸ் Prisoner of Zenda படத்தை தமிழில் எடுக்கப் போவதாக அறிவிப்பு வந்தது!..
இதை அறிந்து அதிர்ச்சியான
திரு.எம் ஜி .ஆர் அவர்கள் திருமதி. பானுமதி அவர்களிடம் விவாதித்தார்! இருவருக்கும் இடையே இருந்த நட்புக்கே சிக்கல் தருவது போல அந்த விவாதம் நீண்டது!..
திருமதி பானுமதி அவர்கள் …. எழுத்தாளர் திரு. A.K.வேலன் அவர்களை வைத்து.. படத்தின் script ஐ முழுவதுமாக உருவாக்கி வைத்திருப்பதாகவும் … அந்தப் படத்தை எடுக்கப் போவது உறுதி என்றும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்!..
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் Prisoner of Zenda செண்டாவில் உள்ள ஒரு முக்கிய நிகழ்வை மட்டும் தன் படத்தில் பயன்படுத்துவதாக சொன்னார்…
ஒரு சாதாரண குடிமகன் … ஒரு மன்னனாக உருமாறி …. நாட்டு மக்களுக்கும் …. மன்னனுக்கும் நல்லது செய்வதாக இருந்த கதை களத்தை மட்டும் தன் படத்தில் பயன்படுத்திக் கொள்வதாக சொன்னார் !..
ஆனால் திருமதி பானுமதி அவர்கள் எந்த ஒப்புதலும் தரவில்லை !..
என்ன செய்வது என்று தெரியாமல் திரு எம் ஜி ஆர் அவர்கள் குழம்பி விட்டார் !
நல்ல வேளையாக கொஞ்ச நாளில் திருமதி பானுமதி அவர்கள் படம் எடுப்பதை கை விடுவதாக சொல்லி விட்டார்..!
திரு.A.K.வேலன் அவர்கள் எழுதி இருந்த கதை திரைக்கதை வசனத்தையும்
திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒப்படைத்து …அதில் உள்ள எந்த பகுதியை வேண்டுமானாலும் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.. என பெருந் தன்மையோடு சொல்லி விட்டார்!.
திரு.எம்.ஜி.ஆர் அவர்களும் திருமதி பானுமதி அவர்களுக்கு நாடோடி மன்னன் திரைப் படத்தில்.. பிரதான கதாநாயகி பாத்திரத்தை தந்து தன்னுடைய நன்றியை காட்டினார் !..
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது !..
ஆனால் திரும்பவும் அடுத்து ஒரு கண்டம் திருமதி. பானுமதி அவர்கள் மூலமே.. காத்திருந்தது….!
திரு எம் ஜி ஆர் அவர்கள் …தான் இயக்கும் முதல் படம் என்பதால் நேர்த்தியாக வர வேண்டும் என்பதற்காக ஒரே shot ஐ பல முறை.. (Takes) …எடுத்தார்!..
இதில் கால விரையமும் நடந்தது !
ஃ பிலிம் சுருளும்.. ஏராளமாக காலியானது !..

அந்த காலத்தில் ஃபிலிம் சுருள் என்பது தங்கத்தை போல மிகவும் விலை அதிகம்!.. இதனால் பணச் செலவு அதிகரித்தது..!
அவர் படத்திற்கு அனுமதி அளிக்கப் பட்ட ஃபிலிம் சுருள் Quota வையும் தாண்டி அவருக்கு ஃபிலிம் சுருள்.. தேவைப்பட்ட தால்.. வெளி நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து வாங்கி படப்பிடிப்பு நடத்தும்… சூழ்நிலையும்.. உருவானது!
அது..திரு.எம்.ஜி.ஆருக்கு தயாரிப்பாளர் என்ற வகையில் கூடுதல்.. சுமையானது!.
அதை விட நிறைய டேக்குகள் எடுத்ததால்.. திருமதி. பானுமதியின் கண்டனத்திற்கும்.. திரு.எம்.ஜி.ஆர்
அவர்கள் ஆளாக நேர்ந்தது..
பொதுவாக தான் நடிக்கும் படங்களில் ஒரு ஷாட்டை ஒரே முறை நடித்து ஓகே செய்பவர் திருமதி. பானுமதி அவர்கள்!
அவர் திரும்பத் திரும்ப ஒரே shot ஐ பல தடவை நடித்ததில் சங்கடமாக உணர ஆரம்பித்தார்..!
ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீறி.. திரு எம் ஜி ஆர் அவர்களிடம் வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை தொடரலாம் …. அல்லது தன்னை படத்தில் இருந்து விலக்கி விடலாம் என்று திருமதி.. பானுமதி அவர்கள் சொல்லும் அளவுக்கு அந்தப் பிரச்சினை பூதாகரம் எடுத்தது!
இயக்குனராகும் தன் முடிவிலிருந்து மாற நினைக்காத.. திரு.எம்.ஜி.ஆர்.. அவர்கள்.. வேறு இயக்குனரிடம்.. பொறுப்பை ஒப்படைக்க விரும்பவில்லை…
அதே போல..தன் இயக்கத்தில் வெளி வரும் முதல் படம்.. எந்த நிர்ப்பந்தத்தாலும்.. சோடை போய் விடக் கூடாது.. என்ற தீர்க்கமான முடிவில்.. திரு.எம்.ஜி.ஆர்..அவர்கள் … திருமதி. பானுமதி அவர்கள் நடித்த கதாபாத்திரம் பாதியில் மரணம் அடைவதாக காட்டி விட்டு..கன்னட திரைப் பட உலகிலிருந்து சரோஜா தேவி அவர்களை இன்னொரு கதாநாயகியாக.. நடிக்க வைத்தார்..!
கறுப்பு வெள்ளைப் படமாக துவங்கிய படத்தை.. பாதிக்கு மேல்.. கேவா கலர்… படமாக மாற்றினார்..!
பாடல் காட்சிகள் படமாக பல நாட்கள் பிடித்தது..!
Under water photo graphy முறையில் எடுக்கப் பட்ட கண்ணில் வந்த மின்னல் போல்.. என்ற பாடலைப் படமாக்கவே..12 நாட்கள் ஆனது..!
‘மானைத் தேடி மச்சான் வரப் போறான்..’ என்ற பாடல் காட்சி.. 6 நாட்கள் படமானது..!
கிளைமேக்ஸ்.. சண்டைக் காட்சி மட்டுமே.. 11 நாட்கள் படமாக்கப் பட்டது..!
திரு.எம்.ஜி.ஆர்.. அவர்களும்.. திரு.எம்.என். நம்பியார் அவர்களும்.. போடும்.. வாள்ச் சண்டை 9 நாட்கள்.. படம் பிடிக்கப் பட்டது..!
திரு. S.S.வாசன்.. தன்.. படப்பிடிப்பு சாதனங்களை வெளி நபர்களுக்கு தருவதில்லை..!.அவர்.. திரு.எம்.ஜி.ஆர்.. அவர்களுக்கு ஜெமினி பிக்சர்ஸின் படப்பிடிப்பு கருவிகளைத் தந்துதவினார்..!
திரு.நாகிரெட்டி. அவர்கள்.. தன்.. விஜயா வாஹினி அரங்கங்களில் அரங்கம் அமைக்க உதவினார்..!
இப்படி.. உதவிகள் கிடைத்தும்.. தயாரிப்பு செலவு பதினெட்டு இலட்சம்..
ஆனது..!
வழக்கமாக ஆகும்.. தயாரிப்பு செலவுகளை விட… மூன்று மடங்கு செலவானது!..
40 அல்லது.. 50 நாட்களில் ஒரு தமிழ்ப் படம் எடுக்கப் பட்டு வந்த கால கட்டத்தில்.. 156 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம்.. நாடோடி மன்னன்..!
ஏராளமாக.. கடன்.. பட்டு.. நாடோடி மன்னனை தயாரித்து இயக்கினார் திரு.எம்.ஜிஆர்.. அவர்கள்..!
நாடோடி மன்னன்.. திரைப்படம் ஓடினால்.. மன்னன்.. ஓடாவிட்டால்
நாடோடி என்று திரு. எம்.ஜி. ஆர்.. சொல்லும் அளவுக்கு சோதனையான கால கட்டம்..அது..!
நடந்தது.. என்ன?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

