அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. அமெரிக்க வர்த்தக குழு ஒன்று டெல்லி வந்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் மூலம் சமூகமான சில முடிவுகள் எடுக்கப்பட்டு வரிவிதிப்பு குறைக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மத்திய ஃபெடரல் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்துள்ளது. இது இந்திய பங்கு சந்தைகளில் எதிரொளித்து, மூன்றாவது நாளாக தொடர்ந்து எழுச்சி பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” 320 புள்ளிகள் அதாவது 0.39 சதவீதம் அதிகரித்து 83 ஆயிரத்து 013 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் “நிப்டி” 93 புள்ளிகள் அதாவது 0.37 சதவீதம் உயர்ந்து 25 ஆயிரத்து 423 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

