Home வணிகம் மூன்றாவது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை!

மூன்றாவது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு, சீர்திருத்தம் அறிவிப்பு, உக்கரின் ரஷ்யா அதிபர்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை, உள்ளிட்ட வற்றால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. நேற்றும் மூன்றாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர் ஏற்றத்தில் வர்த்தகமாகின.

 மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 213 புள்ளிகள் அதாவது 0.26 சதவீதம் உயர்ந்து 81,857 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’ 69 புள்ளிகள் அதாவது 0.28 சதவீதம் உயர்ந்து 25,050 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தன.

Exit mobile version