Home வணிகம் பங்குச்சந்தையில் ஏற்றம்!

பங்குச்சந்தையில் ஏற்றம்!

அமெரிக்கா வரி விதிப்பு குறித்த கவலையால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. தொடர்ந்து பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்”  418 புள்ளிகள் அதாவது 0.52 சதவீதம் உயர்ந்து 81,018 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் “நிப்டி” 157 புள்ளிகள், அதாவது 0.64 சதவீதம் உயர்ந்து 24 ஆயிரத்து 722 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
 

Exit mobile version