Thursday, February 5, 2026
Homeசெய்திகள்மனிதர்களை இரண்டு முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை!

மனிதர்களை இரண்டு முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை!

உத்தரபிரதேசத்தில் மனிதர்களை இரண்டு முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் நாய் கடி வழக்குகளுக்கு மத்தியில் புதிய நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரு மனிதனை கடிக்கும் நாய்கள் 10 நாட்கள் விலங்கு மையத்தில் வைக்கப்படும் என்றும், மீண்டும் அதே செயலைச் செய்தால் மீதமுள்ள நாட்கள் அங்கேயே இருக்கும் என்றும், இதனால் அவற்றுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் சுற்றி வளைத்து காப்பகங்களில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் இந்த உத்தரவு வந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments