Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்அம்புட்டும் பொய்.. யாரும் நம்பாதீங்க.. அறிக்கை வெளியிட்ட சூர்யா நற்பணி இயக்கம்!

அம்புட்டும் பொய்.. யாரும் நம்பாதீங்க.. அறிக்கை வெளியிட்ட சூர்யா நற்பணி இயக்கம்!

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சூர்யா நற்பணி இயக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

“இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கும் முரணானது” என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சினிமா மற்றும் அகரம் அறக்கட்டளை வழியே கல்வி, சமூக நலத்துறைகளில் ஈடுபட்டு வரும் சூர்யாவுக்கு தற்போதைய வாழ்க்கையே போதுமான நிறைவைத் தந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற அகரம் நிகழ்வுக்கு தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, அவரின் சமூகப் பணி மற்றும் சினிமா பயணத்திற்கான பெரும் அங்கீகாரம் எனவும், எதிர்காலத்திலும் சூர்யாவின் கவனம் சினிமா மற்றும் நற்பணி நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கும் என்றும் சூர்யா நற்பணி இயக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, சூர்யா அரசியலில் களமிறங்குவார் என்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களும் பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments