Home Uncategorized தேசிய விருது பெற்ற கதக் நடனக்கலைஞர் காலமானார்!

தேசிய விருது பெற்ற கதக் நடனக்கலைஞர் காலமானார்!

விஸ்வரூபம் படத்துக்காக தேசிய விருது பெற்ற கதக் நடனக்கலைஞரும், இந்தியாவின் புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83. பண்டிட் பிர்ஜூ மகராஜ், டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 

 பிர்ஜு மகராஜ் தனது திறமைக்காக நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவர். இவர் ட்ரம்ஸ், தபாலா உள்ளிட்ட வாத்திய கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.

Exit mobile version