Wednesday, March 4, 2026
HomeUncategorizedடெல்லியில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்- மோடி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றினார்

டெல்லியில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்- மோடி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றினார்

இந்தியா முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. 

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக இன்று காலையில் தனது இல்லத்தில் இருநது புறப்பட்ட , முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.  

பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments