Home Uncategorized தெலுங்கில் அடுத்தடுத்து ரீமேக் செய்யப்படும் அஜித் படங்கள்

தெலுங்கில் அடுத்தடுத்து ரீமேக் செய்யப்படும் அஜித் படங்கள்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை பவன்கல்யாண் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் அங்கு வசூலில் சக்கை போடு போட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்தின் வேதாளம் மற்றும் என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களும் ரீமேக் செய்யப்பட உள்ளன.

அந்த இரண்டு படங்களையும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி ரீமேக் செய்ய உள்ளார். அதில் ஏற்கனவே வேதாளம் படத்தை போலா ஷங்கர் என்ற பெயரில் ஆரம்பித்து விட்டனர். தமிழில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிக்க உள்ளார்.

Exit mobile version