Home Uncategorized தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் – தெற்கு ரயில்வே

தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் – தெற்கு ரயில்வே

தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம்: 1. 22667 நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயில்  2. 12634 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்  3. 22658 நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு ரயில் 4. 17236 நாகர்கோவில் – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில் 5. 11022 திருநெல்வேலி – தாதர் விரைவு ரயில் 6. 16235 தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் 7. 20606 திருச்செந்தூர் – மைசூர் அதிவிரைவு ரயில் 8. 12632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் 9. 12694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் விரைவு ரயில்.

Exit mobile version