தென்னிந்திய மோட்டார் போக்குவரத்துத் துறை அமைக்க அடித்தளமாக இருந்தவரிவர்.
மதுரையில், முதல் பஸ் சேவையைத் தொடங்கிய பெருமை அவரையே சேரும். மதுரையில் அவர் ஆரம்பித்த பஸ் போக்குவரத்தில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக நேரத்தின் அடிப்படையில் பஸ்களை இயக்கும் முறை முதன்முதலில் கொண்டு வந்ததே அவர்தான். அறிவித்த நேரத்தின்படி பஸ் ஒரு நிமிடம்கூட தாமதமாகச் செல்லக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு வாட்சை தந்தார் அவர்.
இந்த பஸ்கள் வருவதையும் போவதையும் வைத்து நேரத்தைத் துல்லியமாகச் சொல்கிற அளவுக்கு மதுரை மக்களும் பழகிப் போயிருந்தனர்.
அத்துடன், பஸ்ஸில் டிக்கெட் நடைமுறையை முதன்முதலில் கொண்டுவந்தவரும் இவர்தான். இரண்டாம் உலகப் போரின் போது, மக்கள் பெரும் பெட்ரோல் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர்.
இதிலிருந்து மீள, அவர் ‘டி.வி. எஸ் எரிவாயு ஆலையை’ வடிவமைத்துத் தொடங்கினார். இன்னொரு விஷயம் தன் பஸ்சூலே எத்தனை சீட்டுகள் உண்டோ, அதற்கு மேல் ஒத்தை ஆளைக் கூட ஏற்றிக் கொள்ளக்கூடாது என்பது அவரது உத்தரவு. தான் போட்ட ஆர்டர் சரியாகத்தான் நடக்கிறதா என்று பார்க்க விரும்பினார்.
அதுக்காக முழுவதும் ஆட்கள் உட்கார்ந்திருக்கும் ஒரு பஸ்ஸை நிறுத்தி, அதில் ஏறலாமா என்று டிரைவரிடம் கேட்டார். கேள்வி கேட்பவர் முதலாளி என்று தெரியாத அந்த டிரைவர், சீட் இல்லாதபோது ஆட்களை ஏற்றிக் கொள்கிற வழக்கமில்லை என்றார். அதிகமாக காசு தருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார்.
காசைவிட முதலாளியின் உத்தரவுதான் முக்கியம் என்று அந்த டிரைவர் சொல்ல, அவரைப் பாராட்டினார் சுந்தரம் அய்யங்கார். ஒருமுறை நடிகர் எம்.ஆர்.ராதா மதுரை வந்திருப்போ அவரோட கார் ரிப்பேராகி போச்சு. ஈவ்னிங் அவர் நாடகம் நடிக்கச் செல்ல வேண்டும்.
அதுனாலே அவரே டிவிஎஸ் ஒர்க் ஷாப்பிற்குச் சென்றார். அங்கு அவரைப் போலவே காரை சரி பார்க்க பலரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். உடணே, ஒரு மெக்கானிக்கை சொடுக்கு போட்டு அழைத்து தன்னுடைய காரை உடனடியாக சரி செய்து தரும்படி கேட்டார்.
ஆனா எல்லோரையும் போல வரிசையில் வரவேண்டும் என்றார் அந்த மெக்கானிக். ‘நான்கூட வரிசையில்தான் வரவேண்டுமா?’ என்று ராதா கேட்க, ‘எங்கள் முதலாளியும் வரிசையில் நின்றுதான் அவர் காரை சரி செய்வார்’ என்று சொன்னார் அந்த மெக்கானிக். இது நெசம், வெறும் புகழ்ச்சியில்லை.
இதையடுத்து ஊழியர்கள் நலன் மீது தனி அக்கறை செலுத்திய அய்யங்கார் அவர்களுக்கான நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசாங்கங்கள் கொண்டு வருவதற்கு முன்பு தன்னுடைய நிறுவனத்தில் செயல்படுத்தியவர். டி.வி. எஸ் குழுவின் கீழ் வரும் நிறுவனங்களில் சில: வீல்ஸ் இந்தியா ப்ரேக்ஸ்இந்தியா சுந்தரம் ஃபாஸ்டநெர்ஸ் டி.வி. எஸ் இன்ஃபோடெக் டி.வி. எஸ் மோட்டார் கம்பெனி இஸட்எஃப் எலெக்ட்ரானிக்ஸ் டி.வி. எஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் சுந்தரம் ஃபைனான்ஸ் டர்போ எனர்ஜி லிமிடெட் ஆக்சல்ஸ் இந்தியா சுந்தரம் கிளேட்டன் லூகாஸ் டி.வி. எஸ் சுந்தரம் மோட்டார்ஸ் சுந்தரம் பிரேக் லைனிங் டி.வி. எஸ் லாஜிஸ்டிக்ஸ் டி.வி. எஸ் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட் சுந்தரம் ஹைட்ராலிக்ஸ் லிமிடெட் Etc.. Etc

