டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது – பாலச்சந்திரன்
2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியீடு
2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது – தலைவர் பாலச்சந்திரன்
2022 பிப்ரவரியில் குரூப் – 2 தேர்வும், மார்ச்சில் குரூப் – 4 தேர்வும் நடைபெறும் – தலைவர் பாலச்சந்திரன்
தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும்
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் – 5831
குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5255, புதிய காலி பணியிடம் 3000
காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது – தலைவர் பாலச்சந்திரன்
அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும், விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் – தலைவர் பாலச்சந்திரன்
தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், முறைகேடுகளை தடுக்க, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரம், இனி தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும் – தலைவர் பாலச்சந்திரன்
டிஎன்பிஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், ஒன் டை ரிஜிஸ்டிரேசன் செய்ய வேண்டும் – தலைவர் பாலச்சந்திரன்
டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் – டிஎன்பிஎஸ்சி
முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் தற்போதும் பணியில் இல்லை – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
தேர்வருக்கு சம்பந்தம் இன்றி தேர்வு மையம் இருந்தால் விளக்கம் கேட்கப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
ஜூலை, செப்டம்பரில் நடத்த இருந்த தேர்வுகள் கொரோனாவால் ஒத்திவைப்பு – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
2022ல் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் – டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன்
தேர்வுக்கான அறிவுப்பிற்கு முன், மாடல் வினாத்தாள் வெளியிடப்படும் எனவும், பாடத்திட்ட அமைப்பு குறித்து கடந்த 1ஆம் தேதி முதல் ஆலோசித்து ஆணையம் தயாரித்து வருகிறது
omr விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள் தேர்வு முடிந்தபின் இனி தனியாக பிரிக்கப்படும்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதிக தேர்வர்களைக் கொண்ட தேர்வுகளையும் கணினி வழித் தேர்வாக நடத்த நீண்ட காலத் திட்டம்.
– தலைவர் பாலச்சந்திரன்

