Skip to main content

திமுக அரசு ஆன்மீக அரசாக செயல்படுகிறது - தருமபுரம் ஆதீனம்

சட்டமன்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மே 5ஆம் தேதி அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கவிருக்கிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் ஆதீனங்கள் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28ஆவது குருமகா சன்னிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர், திரு கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீ காமாட்சிதாஸ் சுவாமிகள் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, “ஆதீன கர்த்தர்கள், சங்கராசாரியர், ஜீயர்களை உள்ளடக்கிய தெய்வீக பேரவையை மீண்டும் நடத்த வேண்டும். 

ஆதீனங்களுக்கான சட்டத்திட்டங்கள், பழக்க வழக்கங்களின் படி அரசு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆன்மீக அரசாக செயல்பட்டுவருகிறது என்றார்.