திருச்சி அருகே பிரபல ரவுடி கௌரிசங்கர் என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து பின், அவருக்கு மாலையும் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி: ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கௌரி சங்கர் மீது பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கௌரி சங்கர் பிரபல ரவுடியான குணா, சுந்தரபாண்டி ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 26) கௌரி சங்கரை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் ஒருவருக்கு பிறந்தநாள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும், தங்களை எங்கு வந்து சந்திப்பது எனக் கேட்டுள்ளார். அதற்கு கௌரிசங்கர் சமயபுரம் அடுத்து வெங்கங்குடியில் தேங்காய் நார் தொழிற்சாலையில் இருப்பதாக பதிலளித்துள்ளார்.
கொடூரமாக வெட்டி கொலை: இதையடுத்து, தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கௌரி சங்கருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளது. அந்த கும்பல் ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரி சங்கரை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர், தாங்கள் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்

