Saturday, March 21, 2026
HomeUncategorizedதிருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயக்கம்.

திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயக்கம்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்  மின்தடம் மாற்றியமைக்கும் பணிகள் நடந்ததால் திருச்செந்தூரிலிருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி பயணிகள் ரயில் ( 066 76) கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் திங்கட்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

 பாலக்காடு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16731) தாழையூத்து திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்தடம் மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்ததால், நாளை (நவ.23) சனிக்கிழமை முதல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments