சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நாளை காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுவாமியை காணா இலவச தரிசன அறிவிப்பினை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது.
இதன்படி, சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நாளை காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

