திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.
இதையடுத்து, 7 – 10ம் தேதி வரையிலான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கான விரைவு தரிசனத்திற்கான முன்பதிவு, நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரின் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

