Home Uncategorized திடீரென மோடியை புகழ்ந்து தள்ளிய சீமான்

திடீரென மோடியை புகழ்ந்து தள்ளிய சீமான்

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்

இந்த நாட்டின் பிரதமர் மோடி அவர்கள், உலகம் முழுக்க செல்கிறார், என்ன சொல்கிறார் என்று கேளு. உலகின் முதல்மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம்.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் தமிழை கற்றுக் கொள்ள பேரார்வம் கொண்டு வருகிறார்கள். இதை நான் சொல்லல… நாட்டின் பிரதமர்.

ஒன்னு தெரிஞ்சுக்க… பெத்த தாயை பட்டினி போட்டுட்டு, எத்தனை ஆயிரம் அன்னதானம் செஞ்சாலும் உனக்கு பலனில்லை. தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு மொழிகளை கற்றாலும் நீ அறிவு கெட்டவன்.

பெத்த தாயை தெரியாத உன்னை என்னன்னு சொல்றது? தனியார் கல்லூரி விழாவில் சீமான் பேச்சு.

Exit mobile version