Friday, March 13, 2026
HomeUncategorizedதமிழ் புத்தாண்டு குரோதி 2024

தமிழ் புத்தாண்டு குரோதி 2024

சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சூரியன் மேசம் ராசியில் நுழைகிறார் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

குரோதி என்று இந்த தமிழ் புத்தாண்டு பெயராகும் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 அவை வரிசையாக வரும் அதன் படி குரோதி 38 வது ஆண்டாகும் 

குரோதி என பகையை சொல்லி போர் வருமோ என அச்சத்தை பலருக்கு ஏற்படுத்தி இருக்கிறது 

சரி ,கடந்த 60 ஆண்டு களுக்கு முன் அதாவது போன குரோதி ஆண்டு நம்ம தமிழ் நாட்ல என்னதான் ஆச்சுன்னு பார்த்தேன்..

தனுஷ்கோடி எனும் ஒரு நகரமே அழிந்தது ஒரு குரோதி வருடம்.

1964 டிசம்பரில் தனுஷ்கோடியில் கடல் பொங்கி 1800 பேர் இறந்த பெரும் துயரம் நடந்தது 

அது போல பெரும் அழிவு நடக்கும் என சொல்லவில்லை ஆனால் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களை குரோதி ஏற்படுத்தலாம் என அச்சம் இருக்கிறது கடந்த குரோதியில் நிறைய நன்மைகளும் நடந்து இருக்கின்றன.சட்ட சீர் திருத்தம் தொழிலாளர் நல சட்டங்கள் உருவான வருடம் இது.

நாடுகளுக்கு இடையே பெரும் போர் என்பது முதலில் பதட்டம் தரலாம் ஆனால் பெரிய போராக அழிவாக மாற வாய்ப்பில்லை அவை எல்லாம் அரசியல் 

ஆனால் இயற்கையிடம் எந்த அரசியலும் இல்லை கால தாமதமும் இல்லை இயற்கையால் சில ஆபத்துகள் நேரலாம் பெரும் பாதகம் இல்லை 

கடந்த குரோதியில் பஞ்சம் உணவு தட்டுப்பாடு அதிகம் இருந்தது இப்போதும் அப்படித்தான் என நினைக்க வேண்டாம்..இப்போது வேறு ஏதேனும் கெட்ட சம்பவங்கள் நடக்கலாம் அவை வரலாறில் இடம் பெறலாம்  அவை நோயாக இருக்கலாம் அல்லது குடிநீர் தட்டுப்பாடாக இருக்கலாம் ஆனால் இயற்கையை நாம் வழிநடத்த முடியாது அதுவே தனக்கு தேவையான மாற்றத்தை உண்டாக்கி கொள்ளும்

மனிதன் அறிவு பெருகி கொண்டே போகிறது நவீன தொழில் நுட்பங்கள் வளர்கின்றன இன்னும் சில முக்கிய அறிவியல் கண்டு பிடிப்புகள் இந்த ஆண்டு நிகழும்.பசி பஞ்சம் நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் ஆண்டாக இது எல்லோருக்கும் அமையட்டும்  பெரிய பெரிய நன்மைகளை எல்லோருக்கும் குரோதி வருடம் வாரி கொடுக்க போகிறது எல்லா ஆண்டுகளை போல நல்ல சம்பவங்களும் ஏராளமாக நடக்கும்

நாம் எப்போதும் போல நம் செயல்களை கடமையை தொடர்வோம் ….

புத்தாண்டு வாழ்த்துக்கள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments