Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழில் இருந்து போனது தான் ஆங்கிலம்: தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சீமான் எடுத்த பாடம்

தமிழில் இருந்து போனது தான் ஆங்கிலம்: தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சீமான் எடுத்த பாடம்

பாரதியை விடவா ஒரு புலவன் இருக்கிறான்.? எல்லா மொழிகளையும் கற்றான் பாட்டன் பாரதி. யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றான்.

ஆங்கிலம் படிக்கிறவனுக்கு ஒண்ணு சொன்னான் பாரு. 1926ல் செத்து போய்ட்டான். ஆங்கிலம், ஆங்கிலம் அறிவு என்று பேசுறே? இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்கு பிறகு, உருவான மொழி ஆங்கிலம்.

இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்குது. உருவாகவில்லை, அது இருக்குது.

என்ன, ஆங்கிலத்தில் நீ சிறப்பு வச்சிருக்கே? என் மொழியை எடுத்திட்டா உனக்கு சொல் இல்லை. 500க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள், உயிர்ச்சொற்கள் நான் போட்டது உனக்கு. என் உடன் ஒரு S போட்டால் sudden. என்னுடைய பேச்சு அதன் உடன் ஒரு S சேர்த்தால் speech என்னுடைய பஞ்சு, ஒரு S போட்டா ஸ்பான்ஜூ.

என்னுடைய கொல், உன் kill. என்னுடைய கட்டுமரம் உன்னுடைய கட்டுமறான். என்னுடைய நாவாய், உன்னுடைய navy. என்னுடைய கலாசாரம், உன்னுடைய culture. உனக்குன்னு என்ன இருக்குது? நான் போட்ட பிச்சையில் உருவாகிட்டு, நான் தான் பெரிய இன்டலிஜென்ட்டுன்னு, போடா… அங்கிட்டு போடா, சும்மா பேசிகிட்டு. தம்பி.. உலகத்தில் எல்லோரும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள்.

தமிழர்கள் நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டு இருக்கிறோம். என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments