இன்றைய தினம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடைபெற்றது.
ஜூன் 4 அன்று வெளியாகவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், பாஜக இம்முறை தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கும்.
முன்பை விட மேலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, இன்னும் வலிமையாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. எனவே, நாம் அனைவரும் இந்த சரித்திர வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும்.
கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு முருகன் அவர்கள், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

