தமிழகம், புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலை நிலவும் - வானிலை மையம்

தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. இந்தச் சூழல் மெல்ல மாறி வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். காலை வேளையில் பனி மூட்டம் நிலவும். தமிழகம், புதுச்சேரி காரைக்காலில், நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.