தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி – தமிழக அரசு.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம். இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி.

