Home Uncategorized தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்

தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்

வட கடலோர மாவட்டங்களைத் தவிர, பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்துள்ளது. இன்றும் (வியாழக்கிழமை) உள் தமிழகத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். வழக்கமான கோடை வெயிலின் தாக்கம் குறைவாகவும், பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இருப்பதால், இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சிறந்த கோடைக் காலமாக அமைந்துள்ளது.

இன்றைய மழைப்பொழிவு (வியாழக்கிழமை): திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, வேலூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Exit mobile version